Close
நவம்பர் 22, 2024 12:49 மணி

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளில் நிழல் இல்லா நாள் மாணவர்கள் உற்சாகம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளில் நிழல் இல்லா நாளில் உற்சாகத்துடன் பங்கேற்ற மாணவர்கள்

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளில் நிழல் இல்லா நாள் மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, அன்னவாசல், பொன்னமராவதி, புதுக்கோட்டை பகுதிகளில் இன்று பள்ளி மாணவர்களுக்கு நிழல் இல்லா நாள் அறிவியல் நிகழ்வு தோன்றும் விதம், காரணம், இதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கும் விதமாக இன்று மதியம் 12:13 மணி அளவில் இயற்கை நிகழ்வான நிழல் இல்லா நாள் செய்து காண்பிக்கப்பட்டது. இதை மாணவர்கள் ஆசியர்கள் ஆர்வமுடன் ஆர்வமாக கண்டுகளித்தனர்.

இந்நிகழ்வினை கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி, கந்தர்வகோட்டை, மட்டங்கால், வேம்பன்பட்டி, காட்டுநாவல் நடுநிலைப் பள்ளிகளிலும், வெள்ளாளவிடுதி அரசு உயர் நிலைப்பள்ளி , தெற்கு வாண்டான்விடுதி (தெற்கு) தொடக்கப் பள்ளி, அன்னவாசல் ஒன்றியம் பூங்குடி நடுநிலைப் பள்ளி, பொன்னமராவதி ஒன்றியம் வார்ப்பட்டு, கருப்புக்குடிப்பட்டி தொடக்கப் பள்ளிகள், கறம்பக்குடி ஒன்றியம் ஒடப்பவிடுதி நடுநிலைப் பள்ளிஉள்ளிட்ட  பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர்.

இன்று ஏற்பட்ட நிழல் இல்லா நாள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கூறியதாவது: எப்போதும் நம்மைப் பின் தொடர்வது நம் நிழல்கள், இதுபோன்று வருடத்திற்கு இரண்டு முறை மட்டும் ஒரு சில மணித்துளிகளுக்கு நம்மை பின் தொடராது. அந்த நாளை தான் நாம் நிழல் இல்லாத நாள் என்கிறோம்.

புதுக்கோட்டை
நிழல் இல்லாத நாள்

இந்த அறிவியல் நிகழ்வு தமிழகம் முழுவதும் ஏப்ரல் மாதம் வெவ்வேறு நாள்களில் நண்பகல் 12.10 முதல் 12.22 வரையுள்ள வெவ்வேறு நேரங்களில் நிகழும். இந்த அரிய நிகழ்வை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் மாணவர் கள் மற்றும் பொது மக்கள் பயன் பெறும் வகையில் நிழல் விழாத நேரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து இக்காட்சியைப் பற்றி விளக்கி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று சரியாக நண்பகல் 12.13 மணியளவில் ஏற்பட்ட நிழல் இல்லா நாளை பற்றிய செயல்முறைகளை செய்து விளக்கினர்.

நிழல் இல்லாத நாள்… சூரியன் தலைக்கு நேர்மேலே இருக்கும்போது சூரிய ஒளி செங்குத்தாக நம் மீது படும். அப்போது நிழல்கள் நமது கால்களுக்கு அடியில் விழும். அதாவது செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுந்து விடுவதால் நம் கண்களுக்கு நிழல் தெரியாது, இதுபோன்று நிழல் தெரியாத நாளை நாம் நிழல் இல்லா நாள் அல்லது பூஜ்ஜிய நிழல் (zero shadow day) நாள் என்று அழைக்கிறோம்.

இந்த நிகழ்வு கடக ரேகை மற்றும் மகர ரேகை ஆகிய இரண்டு எல்லைகளுக்கு உட்பட்ட நாடுகளில் உணரப்படும்.இதற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் சூரியன் மேல்நிலையை அடையாது. அதனால் அந்தப் பகுதிகளில் சூரிய ஒளி எப்போதுமே செங்குத்தாக விழாது. இதனால் அங்கு இந்நிகழ்வை காண முடியாது.

சூரியன் ஜுன் மாதம் 21-22 தேதி கடகரேகையின் மேலே இருக்கும். அதேபோல டிசம்பர் மாதம் 21-22 ஆம் தேதி மகரரேகையின் மேல் இருக்கும். இந்த இரண்டு நிகழ்வுக ளுக்கு முன்னும் ஒரு முறை பூமியில் நிழல் இல்லாத நாள் வரும். அதன்படி ‘நிழல் இல்லாத நாள்’ ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இரண்டு முறை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்டத் தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க பிரச்சார உபகுழுவினர், வட்டார அளவிலான நிர்வாகிகள், ஆசிரியர்கள் செய்திருந் தனர். இதில் மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்று உற்சாக மாக கண்டுகளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top