Close
செப்டம்பர் 20, 2024 4:01 காலை

ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் விருந்து

ஈரோடு

ஈரோட்டில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இப்தார் விருந்து

எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார்  விருந்து  மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் அப்சர் அலி, ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி பாஷா, மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஜமால்தீன், மாவட்ட செயலாளர்கள் க.முனாப், அ.சாகுல் ஹமீது, பொருளாளர் ம.ஃபர்ஹான் அஹமது,

எஸ்.டி.டி.யூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஆட்டோ அப்துல் ரகுமான், சமூக ஊடக அணி கோவை மண்டல தலைவர் அபூபக்கர் சித்திக், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் முசாதிக் அலி, ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் கேபிள் சபீர் அகமது, மேற்கு தொகுதி தலைவர் அப்துல் ரகுமான், செயலாளர் மஸ்தான், பவானி தொகுதி தலைவர் ஜாபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஈரோடு
ஈரோட்டில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி

சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் கோவை ராஜா உசேன், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, திமுக மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிச்சாமி, மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம்,

காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் மக்கள்ஜி.ராஜன், ம.ஜ.க மாநில துணை செயலாளர் பாபு சாஹின்ஷா, தமுமுக மாவட்ட தலைவர் சித்திக், தமிழ்நாடு மக்கள் உரிமை பேரவையின் ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி, ஜமாத்துல் உலமா சபையின் மண்டல செயலாளர் சாதிக் பாஷா தாவூதி.

ஈரோடு
இப்தார் நிகழ்வில் பங்கேற்றவர்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் சாதிக், மாநகர செயலாளர் அம்ஜத் கான், தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன், தந்தை பெரியார் தி.க மாவட்ட செயலாளர் குமரகுருபரன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் கோபு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத் தலைவர் முத்துபாவா, மாமன்ற உறுப்பினர்கள் ஜாபர் சாதிக், பழனியப்பா, செந்தில்குமார் ரமேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்க ளின் பொறுப்பாளர்கள் பொதுமக்கள் முன்னூருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top