Close
செப்டம்பர் 20, 2024 6:25 காலை

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் விருந்து

புதுக்கோட்டை

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சார்பில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு  நிகழ்ச்சி  நடைபெற்றது.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம்மூர்த்தி, புதுகைஹிக்மத்துல் பாலிகா அரபிகல்லூரி முதல்வர் எஸ். அப்துல்ஜப்பார் பாகவி, தசுலுச தேவலாய சபை குரு மறைதிரு ஐ.பி. யோபு ஞானையா ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.

ரோட்டரி மண்டல செயலர்(நிர்வாகம்)வீ.ஆர். வெங்கடாசலம், ரோட்டரி மண்சல செயலர்(திட்டம்) ஜி.எஸ்.எம். சிவாஜி, பி. கருப்பையா, மாவட்டதுணை ஆளுநர்(3000) பி. கருப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்வை புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தலைவர் எம். கோபிநாத், செயலர் எஸ்பி. கருப்பையா, பொருளாளர் ஜிஎஸ்எம். சிவாஜி, திட்ட இயக்குநர்கள் கே. பஷீர்முகமது, எஸ். அகமதுமன்சூர்,எம்எம். பக்ருதீன்அலி,டிஎஸ். அக்பர் அலி, ஏ. காஜாமைதீன்,கேகே. முகமதுதாரிக், ஆர். முகமது கனி ஆகியோர் செய்திருந்தனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சார்பில் நடந்த இப்தார் நோன்பில் பங்கேற்றோர்

இது குறித்து கவிஞர் தங்கம் மூர்த்தி கூறியதாவது:

சமூக நல்லிணக்கம் என்பது ஒரு நாட்டில் வாழும் சமூகங்களுக்கிடையில் இன, மத, மொழி, குடும்ப உறவுகள் என்பவற்றில் உண்டாகும் புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுப்பு என்பவற்றை குறிக்கும். இது பல்வேறு அமைப்புக்களின் அடிப்படையில் வேறுபடுகின்ற இரு சாராருக்கு மத்தியில் ஏற்படுகின்ற ஒருமைப்பாட்டினை வலியுறுத்துகிறது.

இன்பமும் துன்பமும் இரண்டில் எது சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருந்தாலும் இந்து முஸ்லிம் கிறிஸ்துவ என்று மதத்தை பிரித்துப் பார்க்காமல் மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு செயலை செய்வது சமூக நல்லிணக்கம் ஆகும்.

சமூக நல்லிணக்கம் என்பது ஒரு நாட்டுக்குள் வாழும் பல பண்பாட்டுச் சமூகங்களிடையே ஒற்றுமை, புரிந்துணர்வு, சகவாழ்வு ஆகியவற்றை நிலைநிறுத்தவதை அடிப்படை யாகக் கொண்ட பண்பாகும். இதை வலியுறுத்துவதிலும் செயலாக்கத்திலும்  தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருவது சிறப்புக்குரியது என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top