Close
நவம்பர் 22, 2024 6:14 மணி

இன்றுடன் நிறைவு பெற்றது.. பத்தாம் வகுப்பு பொது தேர்வு ..

புதுக்கோட்டை

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய புதுக்கோட்டை ராணியார், டிஇஎல்சி பள்ளி மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு  இன்றுடன்(ஏப்.20) நிறைவடைந்தது.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.04.2022  (அன்று) தொடங்கி 20.04.2022 (இன்று) நிறைவு பெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 25,504 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்.

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி கல்வி மாவட்டங்களில் 119 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்கு 02-தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன. 190 பறக்கும் படை நிலையான அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர். 11 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன..

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில்  புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 6,900 மாணவர்கள், 7,433 மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 181 பேரும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 5,442 மாணவர்கள், 5,634 மாணவிகள் தனித்தேர்வர்கள் 91 பேரும் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்.

புதுக்கோட்டை நகரில் ராணியார் மேல்நிலைப்பள்ளி ராணியார் உயர்நிலைப்பள்ளி திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளி வடக்கு ராஜவீதியில் உள்ள டி இ எல் சி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மாவட்ட அளவில் தேர்வுகள் நடைபெற்றது. 20.04.2023  இன்று பொதுத் தேர்வு நிறைவு பெற்ற நிலையில், புதுக்கோட்டை கீழ மூன்றாம் வீதியில் உள்ள ராணியார் உயர்நிலைப் பள்ளியில் 113 மாணவிகள் தேர்வுகள் எழுதினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிகளை வழியனுப்பி வைத்த ஆசிரியர்கள்
தேர்வு எழுதிய மாணவி கற்பக ஸ்ரீ பாலா கூறுகையில், நான் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இந்த பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறேன் நான் பள்ளியில் சேர்ந்த பொழுது அச்சத்துடன் சேர்ந்தேன் இந்த பள்ளி ஆனது தனியார் பள்ளிக்கு இணையாக செயல்பட்டு வருகிறது.
தற்போது பத்தாம் வகுப்பு படித்து பொது தேர்வு எழுதியுள் ளேன் எனக்கு அனைத்து ஆசிரியர்களும் நல்ல பழக்க வழக்கத்துடன் கற்பிக்க வைத்தனர்.  மேலும் அனைத்து பாடங்களிலும் எளிமையாக தேர்வு எழுதி உள்ளேன்.
எனக்கு 400 முதல் 475 மதிப்பெண்கள் வரை நிச்சயமாக எனக்கு கிடைக்கும். மேலும் என்னுடன் பயிலும் மாணவிகளும் நன்கு படித்து தேர்வை எழுதி உள்ளனர்.
புதுக்கோட்டை
தேர்வு முடித்து பிரியாவிடை புெறும் மாணவிகள்
பொதுவாக அனைத்து தேர்வுகளும் எளிமையாக தான் இருந்தது நிச்சயமாக அனைத்து மாணவிகளும் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக   தலைமை ஆசிரியர் பொறுப்பு கஜலட்சுமி  தெரிவித்தார். ஆசிரியர்கள் அனைவரும்  மகிழ்ச்சியுடன் கை குலுக்கி வழியனுப்பி வைத்தனர்.
அனைவரையும் ஆசிரியர்கள் தேர்வு எழுதிய அனைத்து மாணவிகளையும் வழி அனுப்பி வைத்தனர். புதுக்கோட்டை நகர் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஆரவாரத்துடன் ஒருவருக்கு ஒருவர்  மகிழ்ச்சியை  பரிமாறிக்  கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top