Close
செப்டம்பர் 20, 2024 8:55 காலை

கிருஷ்ணகிரி ஆணவப் படுகொலையைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுகையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி ஆணவப் படுகொலைக் கண்டித்து புதுக்கோட்டையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டையே உலுக்கிய கிருஷ்ணகிரி சாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் சுபாஷ்(22)  இவரும் அனுசுயா என்ற தலித் வகுப்பைச் சேர்ந்த  பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். பெண் தலித் nஎன்பதல் சுபாஷின் உறவினர்கள் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே இருவரும் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்துள்ளனர்.

இவர்களை வஞ்சகத்தோடு சுபாஷின் தந்தை தண்டபாணி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தபோது அனுசுயாவை தண்டபாணி அரிவாளால் வெட்டியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு தடுக்க முயன்ற மகன் சுபாஷின்  தாயார் கண்ணம்மாள் ஆகியோரையும் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுபாஷும், கண்ணம்மாவும் உயிரிழந்தனர். அனுசுயா படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுக்கோட்டை

இத்தகைய கொடூரமான சாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் டி.சலோமி தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம், விதொச மாநில செயலாளர் எஸ்.சங்கர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் எம்.அசோகன், அ.மணவாளன், கே.முகமதலி ஜின்னா, சி.மாரிக்கண்ணு, பி.சுசிலா, எஸ்.பாண்டிச்செல்வி, வே.வீரையா, எஸ்.நல்லதம்பி, யாசிந்த், ரகுமான், ஜெகன் உள்ளிட்டோர் பேசினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top