Close
நவம்பர் 22, 2024 12:31 மணி

இலவசக் கல்வி திட்டத்தில் சேர்க்கை இடங்கள் குறைப்பு: முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளிப்பு

புதுக்கோட்டை

கோரிக்கை மனுவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் தலைவர் அசரப் அன்சாரி கொடுத்தார்

தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி திட்டத்தில் இடங்கள் குறைப்பு பெற்றோர்கள்   ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட  தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் அசரப் அன்சாரி,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கொடுத்த  கோரிக்கை மனு விவரம்:
கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளின் எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பில் 25 சதவிதம் இடங்கள் வாய்ப்பு மறுக்கப் பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளுக்கு  தொடர்ந்து வழங்கபட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் இக்கல்வி ஆண்டிற்கான சேர்க்கைக்கு    இன்று முதல்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க பெற்றோர் கள் ஆர்வமுடன்  தயாராக இருந்தனர்.
இந்நிலையில் கடந்த கல்வி ஆண்டுகளைப் போல மாணவர் எண்ணிக்கைக்கு இடம் அளிக்காமல்  25 சதவீதத்துக்கும்  குறைந்த அளவே இடங்களே அரசின் சார்பில் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஏற்கெனவே பள்ளிக்கு ஓரு பிரிவுக்கு 8 மாணவர்கள் என்ற நடைமுறை இக்கல்வி ஆண்டு மாற்றப்பட்டு உள்ளது.
தற்போது கல்வி கற்கும் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில்  25சதவிதம் என மாற்றம் கொண்டுவரப் பட்டுள்ளது.இந்த  கணக்கீடு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை பாதுகாப்பதாக இல்லை ,
கொரொனா காலத்திற்கு பிறகு தற்போது தான் மாணவர்கள் கல்வி பயில வருகிறார்கள். சமுதாயத்தில் பின்தங்கிய பெற்றோர்களின் குழந்தைகளின் கல்வி கனவு இவ்வகை கணக்கீடு மூலம் சிதைந்துள்ளது.
இந்த  கணக்கீட்டு முறையை மாற்றி கடந்த கல்வி ஆண்டு  களைப்போலவே  இம்முறையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது,
இக்கோரிக்கையை தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கையை எடுத்துரைக்க தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் அனைவரும் அதன் தலைவர் அசரப் அன்சாரியிடம்  மனு அளித்தனர்.
பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம்  தலைவர் அசரப்அன்சாரி  கொடுத்தார். மனுகுறித்து விரைவில் தமிழக அரசு நல்ல முடிவை அறிவிக்கும் என தாளாளர்கள் மற்றும் பெற்றோர்கள் காத்திருக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top