12 மணி வேலை நேர வேலைக்கான சட்டத்திருத்தத்தைக் கண்டித்து வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
8 மணி நேரத்துக்குப் பதிலாக 12 மணி என வேலை நேரத்தை மாற்றி தமிழ்நாடு அரசு கொண்டுவந்த தொழிற்சாலைகள் சட்ட திருத்தத்தைக் கண்டித்தும், உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பி.அருண் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் எம்.மகாதீர், துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன்,, மாவட்ட குழு உறுப்பினர்கள் பாண்டி, கெளதம், தினேஷ், தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வாலிபர்கள் பங்கேற்றனர்.
சிஐடியு ஆர்ப்பாட்டம்
8 மணிக்குப் பதிலாக 12 மணி என வேலை நேரத்தை மாற்றி தமிழ்நாடு அரசு கொண்டுவந்த தொழிற்சாலைகள் சட்ட திருத்தத்தைக் கண்டித்தும், உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் இந்திய தொழிற்சங்கம் சிஐடியு சார்பில் புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா தலைமை வகித்தார். மாநில செயலாளர்கள் ஏ.ஸ்ரீதர், எஸ்.தேவமணி ஆகியோர் கண்டண உரையாற்றினர். கோரிக்கைகளை விளக்கி சி.மாரிக்கண்ணு, கே.ரெத்தினவேல், ரேவதி, சித்தையைன், சரவணன், செல்வி, மாணிக்கம், முருகதாஸ் உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன், நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.