Close
செப்டம்பர் 20, 2024 6:58 காலை

கோபி சட்டமன்ற தொகுதியில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஈரோடு

கோபியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கும் நிகழ்வு

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோபி சட்டமன்ற தொகுதிக்கான புதிய உறுப்பினர் சேர்க்கும்  முகாம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்,இதில் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர்கள், நகராட்சி,  ஒன்றியம், பேரூராட்சி பொறுப்பாளர்கள் ,மற்றும் அனைத்து ஊராட்சிகளின் கழகப் பொறுப்பாளர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , கூட்டுறவு சங்க பொறுப்பாளர் கள்,உள்ளிட்ட 500 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

அதை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது
அதிமுக கொடி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருக்கிற இயக்கத்திற்கு கிடைத்துள்ளது. அதேபோல இரட்டை இலை சின்னமும் கிடைத்துள்ளது.

அதிமுகவைப் பொறுத்தவரை வெற்றி மீது வெற்றி வந்து சேர்ந்து வருகிறது.அதை வாங்கி தந்த பெருமை அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமியை சார்ந்துள்ளது. இன்று ஒவ்வொரு நாளும் வெற்றிதான்.ஈரோடு தேர்தல் களத்தில் இருக்கின்ற போதுதான் இரட்டை இலை சின்னத்தை பெற்றோம்.

தமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி பெருகின்ற அளவிற்கு தர்மம் வென்று இருக்கிறது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மீண்டும் வெல்லும் என்பதைப் போல வெற்றி கிடைத்துள்ளது.

வெற்றி மீது வெற்றி வந்து சேர்கின்ற போது நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் தமிழகத்தில் அதிமுக தான் வெற்றி பெற முடியும்.புதுச்சேரி உட்பட தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உள்ள கூட்டணிதான் வெற்றி பெறும்.

2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து அனைத்து நிலைகளிலும் அதிமுக போராடும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி சத்தியாபாமா,யூனியன் சேர்மன் மவுதீஸ்வரன் கவுன்சிலர் முத்துரமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top