Close
செப்டம்பர் 20, 2024 3:56 காலை

தேசிய வருவாய் வழி திறனறித்தேர்வு: 10 ஆண்டுகளாக தொடர் வெற்றி பெறும் மேலப்பட்டி நடுநிலைப் பள்ளி

புதுக்கோட்டை

தேசிய திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற மேலப்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவரை வாழ்த்திய ஆசிரியர்கள்

தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் (NMMS) 10 ஆண்டுகளாக தொடர் வெற்றியைப் பெற்று சாதனை படைத்து வருகிறது மேலப்பட்டி நடுநிலைப்பள்ளி.
கடந்த ஆண்டில் ( NMMS -2022-23) நடத்தப்பட்ட தேசிய வருவாய் வழி திறனறித் தேர்விலும் வழக்கம் போல  புதுக்கோட்டை  ஒன்றியம், மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயின்ற மாணவர் மணிகண்டன் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
2013 -14 -ஆம் கல்வி ஆண்டில் இருந்து இதுவரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர் என்பது  பெருமைக்குரி செய்தியாகும்.
தேர்வில் வெற்றி பெற்ற  மாணவரை பாராட்டும்    நிகழ்வில் புதுகை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பாலமுருகன் பங்கேற்று   மாணவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்தினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் சீத்தாலட்சுமி, அறிவியல் ஆசிரியர் ப. மகேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள்  சரவணன், ஜெயந்தி, ஜெயலட்சுமி,  இந்திரா  மற்றும்  மாணவ, மாணவிக ளின் பெற்றோர்கள்  ஆகியோர் வெற்றி பெற்ற மாணவரைப் பாராட்டினர்.
அரசு பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத் தின் கீழ்  இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 9 -ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ. 1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top