Close
நவம்பர் 22, 2024 11:52 காலை

கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பூமியின் ஆரம் அளக்கும் செயல்முறை விளக்கம்

புதுக்கோட்டை

கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிழலில்லா நாள் பற்றிய செயல் முறை விளக்கமுகாம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

புதுக்கோட்டையில் புதுமையான வானவியல் நிகழ்வு பூமியின் ஆரத்தை கணக்கிடுதல் பற்றி கல்லூரி மாணவிகளுக்கு செயல் முறை விளக்கமளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கைக்குறிச்சியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிழலில்லா நாள் பற்றி 24.04.2023 அன்று  செயல்முறை விளக்கமும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

விஞ்ஞான் பிரச்சார் , தமிழ்நாடு ஆஸ்ட்ரோனமிக்கல் சயின்ஸ் சொசைட்டி, அறிவியல் பலகை ஆகிய அமைப்புகள் இந்நாளில் பூமியின் ஆரத்தை அளக்கும் முயற்சியில் பல மாவட்டங்களில் செய்து வருகிறது.

புதுக்கோட்டை
கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிழலில்லா நாள் பற்றிய செயல்முறை விளக்கம் பெறும் மாணவிகள்

புதுக்கோட்டையில் இயங்கும் புதுக்கோட்டை ஆஸ்ட்ரோ கிளப் மூலமாக ஸ்ரீ பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிழலில்லா நாள் குறித்த விழிப்புணர்வும் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டதோடு மட்டுமல்லா மல் பூமியின் ஆரத்தை அளக்கும் செயற்பாடும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இதில் , ஸ்ரீ பாரதி மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு குரு.தனசேகரன் , அறங்காவலர்கள், தாளாளர்கள், ஸ்ரீ பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குநர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 1500 -க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top