Close
நவம்பர் 25, 2024 2:22 மணி

புதிய கடற்படை அதிகாரியாக ரவி குமார் திங்ரா பொறுப்பேற்பு

சென்னை

தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படை அதிகாரியாக ரவி குமார் திங்ரா செவ்வாய்க்கிழமை பொறுப் பேற்றார்.

தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படை அதிகாரியாக ரவி குமார் திங்ரா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.

இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரியாக பணி யாற்றிவந்த எஸ்.வெங்கட்ராமன் புதுதில்லியில்உள்ள ராணுவ தலைமையகத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டதைய டுத்து, ரியர் அட்மிரல் ரவி குமார் திங்ரா புதிய அதிகாரியாக செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.

புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்ற திங்ரா ஜன.1, 1992-ல் இந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் பணியில் சேர்ந்தார். 1994-ஆம் ஆண்டு நீர்மூழ்கிக் கப்பல் படையில் சேர்ந்தார்.

கடல் வழி பாதை மற்றும் திசைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர் ஐ.என்.எஸ். வாகீர், சிந்து சாஸ்த்ரா,  சிந்துராஜ், வாக்லி, சிந்துகோஷ்,  கோமதி, வஜ்ராபாகு உள்ளிட்ட நீர்மூழ்கிக் கப்பல்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். மேலும்  கடற்படைத் தலைமையகத்தில் உள்ள நீர்மூழ்கிக் கப்பல் இயக்குநரகத்தில் முதன்மை இயக்குநராகும் பணியாற்றியுள்ளார்.  வெலிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் முதுகலை பெற்ற திங்ரா மும்பை பல்கலைக் கழகத்தில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளார்.

இவரது சேவையைப் பாராட்டி..

இந்த அதிகாரி வெலிங்டனில் உள்ள மதிப்புமிக்க பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் பாதுகாப்புப் படிப்பில் முதுகலை பட்டதாரி ஆவார் மற்றும் மும்பை பல்கலைக் கழகம்/பல்கலைக்கழகத்தில் மூலோபாய ஆய்வுகளில் M.Phil பட்டம் பெற்றவர். இவரது சேவையைப் பாராட்டி  2019-ம் ஆண்டு விசிஷ்ட் சேவா பதக்கம் மத்திய அரசால் வழங்கப் பட்டது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top