புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் நிறுவனர் அறமனச்செம்மல் சீனு.சின்னப்பா முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக இரண்டாம் நாள் நிகழ்வாக யோகாசனப் போட்டி சின்னப்பா நகரில் உள்ள மஹராஜ் மஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
போட்டியினை எஸ்.வி.எஸ் – ஹீரோ நிர்வாக இயக்குனர் எஸ்.வி.எஸ். ஜெயகுமார் தொடக்கி வைத்தார்.ரோட்டரி மாவட்டம் 3000-தின் முன்னாள் துணை ஆளுநர்கள் கருணாகரன், பிரசாத், பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். பிற்பகலில் நடைபெற்ற கவிதைப் போட்டியினை மாமன்னர் கல்லூரியின் பொருளாதார துறை பேராசிரியர் கருப்பையா தொடக்கி வைத்தார். ஆத்மா யோகா மையத்தின் நிறுவனர் யோகா ரெ.பாண்டியன் வரவேற்றார்.நடுவர்களாக கவிஞர் மா.கண்ணதாசன், தமிழ் ஆசிரியர்கள் உதயகுமார், ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற யோகா மற்றும் கவிதைப் போட்டிகள் எல்கேஜி, யுகேஜி, ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை, 4-ஆம் வகுப்பு முதல் 6- ஆம் வகுப்பு வரை, 7-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை 10 – முதல் 12-ஆம் வகுப்பு என 5- பிரிவாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது.
350 -க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி யோகா மற்றும் கவிதை ஒப்புவித்த மாணவ மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர். முன்னதாக அறமனச்செம்மல் சீனு. சின்னப்பா அவர்களின் உருவப்படத்திற்கு குழந்தைகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.