Close
செப்டம்பர் 20, 2024 6:20 காலை

அறமனச்செம்மல் சீனு.சின்னப்பா நினைவு நாள்: குருதிக்கூடு,ஜேசி, ஆத்மா யோகா, வெங்கடேஸ்வரா பள்ளி சார்பில் ரத்ததான முகாம்

புதுக்கோட்டை

அறமனச்செம்மல் சீனு.சின்னப்பா அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக மூன்றாம் நாள் நிகழ்வாக மாபெரும் இரத்ததான முகாம் சின்னப்பா நகரில் உள்ள மஹராஜ் மஹாலில் நடைபெற்றது

புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் நிறுவனர் அறமனச் செம்மல் சீனு.சின்னப்பா அவர்களுடைய முதலாம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக மூன்றாம் நாள் நிகழ்வாக மாபெரும் இரத்ததான முகாம் சின்னப்பா நகரில் உள்ள மஹராஜ் மஹாலில் நடைபெற்றது.

குருதிக் கூடு- ஜேசி- புதுக்கோட்டை சென்ட்ரல், ஸ்ரீவெங்கடேஸ் வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி , ஆத்மா அகாடமி இணைந்து நடத்தியஇம்முகாமினை புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவ மனையின் மேனாள் தலைமை மருத்துவ கண்காணிப் பாளர் மருத்துவர் ஜி.எட்வின், குழந்தைகள் நல மருத்துவர் ச.ராமதாஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரத்த வங்கி மருத்துவ அதிகாரி மருத்துவர் கிஷோர்குமார் தலைமையில் இரத்த வங்கி மருந்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக வாசகர் பேரவை செயலாளர் பேராசிரியர் சா.விஸ்வநாதன், நகர்மன்ற உறுப்பினர் சா.மூர்த்தி, மரம் நண்பர்கள் செயலாளர் பழ.கண்ணன், ஜேசி முன்னாள் மண்டலச் செயலாளர் இராம.லெட்சுமணன், கேஎன்கே,  ஆறுமுகம் குருதிக் கூடு இரத்த தான அமைப்பின் நிறுவனர்கள் சுப.முத்துப்பழம்பதி, உடற்கல்வி ஆசிரியர் க.முத்துராமலிங்கம்,.

ஜேசி புதுக்கோட்டை சென்ட்ரல் தலைவர் கஜேந்திரன், செயலாளர் ரமேஷ், நேரு யுவகேந்திரா உதவி திட்ட அலுவளர் இரா.நமச்சிவாயம், மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவர் சதாசிவம்,

கருணாகரன், முருகபாரதி, ஆத்மா அகாடமி நிறுவனர் யோகா ரெ.பாண்டியன், செயலாளர் புவனேஸ்வரி பாண்டியன், ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மஹராஜ் பேக்கரி பணியாளர்கள் மற்றும் இரத்த கொடையா ளர்கள் நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள் முன்னதாக அறமனச் செம்மல் சீனு. சின்னப்பா அவர்களின் உருவப்படத்திற்கு கலந்துகொண்ட அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top