Close
நவம்பர் 24, 2024 3:55 மணி

அறமனச்செம்மல் சீனு.சின்னப்பா முதலாண்டு நினைவேந்தல்…

புதுக்கோட்டை

அறமனச்செம்மல் சீனுசின்னப்பா முதலாண்டு நினைவேந்தல் நிகழ்வில் அஞ்சலி செலுத்தும் சான்றோர்கள்

புதுக்கோட்டை  பேக்கரி மஹராஜ் நிறுவனரும், வர்த்தக சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர்,  அறமனச்செம்மல்  தெய்வத்திரு சீனு சின்னப்பாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி புதுக்கோட்டை அருகே பெருங்கொண்டான் விடுதி கிராமத்தில் தோட்டத்தில் உள்ள நினைவிடத்தில்  திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ- வுமான சி. விஜயபாஸ்கர், புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா, திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மேனாள் துணை வேந்தர் சொ. சுப்பையா, திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தர் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள், மூத்த மருத்துவர்கள் சா. ராம்தாஸ், கே.எச். சலீம்.
வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, இளங்கோ மன்றப் பொருளாளர் சத்தியராம் ராமுக்கண்ணு, கம்பன் கழகச் செயலர் ரா. சம்பத்குமார், உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சண்முக பழனியப்பன்,  வாசகர் பேரவையின் செயலர் பேராசிரியர் சா. விஸ்வநாதன். தொழிலதிபர் எஸ்விஎஸ். விஜயகுமார்.
நகர்மன்ற உறுப்பினர் சா. மூர்த்தி, குத்துச்சண்டை கழகத் தலைவர் எஸ்விஎஸ். ஜெயகுமார், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ. சந்திரசேகரன், சிறுபான்மை யினர் பிரிவு மாநிலத் துணைச் செயலர் ஏ. இப்ராஹிம் பாபு, தொல்லியல் கழக நிர்வாகிகள் ஆ. மணிகண்டன், கரு. ராஜேந்திரன். திமுக நிர்வாகி விராலிமலை பழனியப்பன், கவிஞர் பீர்முகமது உள்பட  நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கலந்து கொண்டு சீனு. சின்னப்பாவின்  நினைவிடத்தில் மாலை மற்றும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த  உருவப் படத்துக்கும் மலரஞ்சலி செலுத்தினர்.
நினைவேந்தல் நிகழ்வில், அமரர் சீனு. சின்னப்பா குறித்த ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் பங்கேற்ற  அனைவருக்கும்  மரக்கன்றுகளும்,  சிறப்பு மலரும் வழங்கப்பட்டன.  பேக்கரி மஹராஜ் உரிமையாளர் அருண் சின்னப்பா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top