Close
செப்டம்பர் 20, 2024 2:48 காலை

ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த காவலருக்கு அரசு மரியாதை..

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த காவலருக்கு இறுதி மரியாதை செய்த போலீஸார்

திருமயம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டி இறந்த காவலருக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூர் மஞ்சுவிரட்டு போட்டி நேற்று முன்தினம்  நடைபெற்றது. இந்த போட்டிக்கு பாதுகாப்பிற்காக மீமிசல் காவல் நிலையத்தில் பணியாற்றும் நவநீதகிருஷ்ணன் என்ற காவலர் பாதுகாப்புப்  பணிக்காக சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக  மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தார்.

அவரை பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். சரியான முறையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப் படாமல் இருந்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து  காவலரின் உடல் பிரேத பரிசோதனை செய்த பினனர்  வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.  அங்கு வந்த மாவட்ட கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே,  இறந்த காவலர் நவநீதகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்தி பின்னர் அவரது துணைவியாருக்கு ஆறுதல் கூறினார்.

இதனை அடுத்து அவரது உடல்  அவரது சொந்த ஊரான அறந்தாங்கி எல்.என். புரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு  மயானத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில்  30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறந்த காவலரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top