இங்கிலாந்தில் நாட்டின் சட்டதிட்டங்கள் படிஆணோ அல்லது பெண்ணோ யார் முதல் பிறப்போ அவர்களுக்குத்தான் பட்டம். அதனால்தான் மன்னர் மற்றும் மகாராணி என மாறி மாறி வருகிறது.
மகாராணியெனில் அவரது கணவர் ஒரு இளவரசர் அவ்வளவுதான். அதிகாரம் எதுவும் கிடையாது. இளவரசராக இருந்த சார்லஸ் இன்று மன்னராக முடி சூட்டப்பட்டார்.
மன்னர் காலத்தில் காணப்பட்ட எந்த அதிகாரங்களும் இன்றைய அரச குடும்பத்திற்கு இல்லை. உண்மையில் இப்போது இது ஒரு சடங்குசார் பதவியே. ஒரு வகையில் இந்தியாவிலுள்ள குடியரசுத் தலைவர் பதவி போன்ற ஒரு முத்திரையிடும் பதவியே.
கடவுச்சீட்டுகளை வழங்குதல்-மீளப்பெறுதல் போன்ற பணிகள் அரசி அல்லது மன்னர் பெயரில் இடம்பெற்றாலும், நாடாளுமன்றமே முடிவுகளை மேற்கொள்கின்றது. சடங்குரீதியான சில அதிகாரங்கள் இனிவரும் காலங்களில் மன்னரிடம் இருக்க போகிறது.
நாடாளுமன்றத்தைத் தொடக்கி வைத்தல், முடித்து வைத்தல்.
சட்டமுன் வரைவுகளை சட்டமாக்குதல்.தலைமை அமைச்சரையும், பிற அமைச்சர்களையும் பதவியில் அமர்த்தலும் விலக்கலும். போரினை முன்மொழிதல்.. மேற்கூறிய அதிகாரங்கள் அனைத்தும் ஏட்டளவில் இருந்தாலும் நடைமுறையில் அவ்வாறான முடிவுகள் எல்லாம் நாடாளுமன்றத் தாலேயே எடுக்கப்பட, மன்னர் அவற்றுக்கான இசைவினை மட்டுமே வழங்குவார்.
மன்னருக்கோ அரசிக்கோ இருக்கும் மரியாதையானது மரபுசார்ந்தும், ஆங்கிலப் பேரரசிற்கான பெருமை சார்ந்தும் இன்றும் பிரித்தானிய மக்களில் பெருமளவு ஆதரவு வழங்கப்படுகின்றது.
அதே வேளையில் சிறியளவிலான மக்கள் அரசகுடும்பத்தின் பெயரளவிலான அதிகாரங்களிற்கும், அவர்களுக்காக ஆகும் பெருமளவு செலவுகளுக்கும் எதிராக குரல் கொடுத்தே வருகின்றனர்.
இங்கிலாந்து பெரும் செல்வ நாடாக இருந்தபோது பல சலுகைகளும் வசதிகளும் ராஜகுடும்பத்திற்கு வழங்கப்பட்டன. தற்போது பொருளாதார நெருக்கடியில் அவர்களுக்கான சலுகைகள் இன்னும் கூடுதலாக குறைக்கப்பட வேண்டும் என்பதே குடிமக்களின் பொதுவான எதிர்பார்ப்பு.
இன்றும் கூட முடி சூட்டு விழா ஊர்வலத்தில் எழுந்தசிறிய சலசலப்புக்கு,எதிர்ப்பு குரலுக்கு மத்தியில்பெருத்த ஆதரவுடன்மன்னர் சார்லஸ் முடி சூட்டு விழாஇனிதாய் நடந்து முடிந்தது.. மகாராணியை போலவேஇந்த மன்னரும் ஊமை ராஜாவாக இருக்கப்போகிறார்.பருத்தி மூட்டை கிடங்கிலேயே கிடக்கலாம்..,
இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋