Close
நவம்பர் 22, 2024 11:35 காலை

புதுக்கோட்டை அருகே திருவிழாவை யொட்டி ஜல்லிக்கட்டு : 11 பேர் காயம்

புதுக்கோட்டை

புதுகை அருகே ஓட்டக்குளத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை அருகே பொன்னம்பட்டி ஓட்டக்குளம் ஆயகட்டுதாரர்கள் மற்றும் பொது ஊர் பொதுமக்களால் நடத்தப்படும் 131 வது ஆண்டு குதிரை எடுப்பு திருவிழா முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதில் காளைகள் முட்டியதில் 11 பேர் காயம்.

புதுக்கோட்டை அருகே பொன்னம்பட்டி ஓட்டக்குளம் ஆயகட்டுதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்களால் நடத்தப்படும் 131 -ஆவது ஆண்டு காரண செல்ல அய்யனார், செல்லாயி அம்மன் கோவில் குதிரை எடுப்பு திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஓட்டக்குளம் கண்மாயில் நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியினை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி ,சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 586 காளைகளும் அதேபோன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250 மாடு பிடி வீரர்களும் பங்கேற்று உள்ளனர்.

இதில் ஆறு சுற்றுகளாக மாடுபிடி வீரர்களை களம் இறக்கி விடப்பட்டு வாடி வாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு காளைகளை அடக்கினர்.

இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்காமல் சீறிப்பாய்ந்து சிறிது நேரம் போக்கு காட்டி சென்றது இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசு, வெள்ளி காசு, சில்வர் அண்டா, குக்கர், மிக்ஸி,  டேபிள்பேன், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜல்லிக்கட்டு விழாவினை ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.  இந்த ஜல்லிக்கட்டு போட்டி வருவாய்த் துறையினர், கால்நடை துறையினர். மருத்துவத் துறையினர் உள்ளிட்டோர் கண்காணிப்பில் நடைபெற்றது.

நூற்றுக்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் மாடு பிடி வீரர் மற்றும் பார்வையாளர், மாட்டின் உரிமையாளர் என 11 பேர் காயம் அடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top