Close
செப்டம்பர் 20, 2024 7:23 காலை

தமுஎகச சார்பில் கறம்பக்குடியில் கலை இரவு…

ஆலங்குடி

கறம்பக்குடியில் தமுஎகச சார்பில் நடைபெற்ற கலை இரவு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில்  கலை இரவு  நடைபெற்றது.

கிளை தலைவர் ஷெல்லி மனோகர் தலைமை வகித்தார். செயலாளர் அரிபாஸ்கர் வரவேற்றார்.மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் சரவணன் தொடக்கி வைத்தார்.

மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் கவிஞர் நா.முத்துநிலவன், கவிஞர் ஜீவி, கவிஞர் ஆர்.நீலா, கவிஞர் தங்கம் மூர்த்தி பங்கேற்று பேசினர்.

தருமபுரி பாரதி கலைக்குழுவினரின் தப்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைகள்  அரங்கேறின. நிகழ்வில் கறம்பக்குடி நூலகம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்த கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை பாராட்டப் பெற்றார். தமிழறிஞர் கரு. ஆறுமுகத் தமிழன் சிறப்புரையாற்றினார்.

கறம்பக்குடி
கறம்பக்குடியில் நடைபெற்ற தமுஎகச கலை இரவு

கலை இலக்கியத்தில் சிறந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெற்றனர். மண்ணின் மகத்தான ஆளுமை விருது ப.உமாபதி, ஆதனக்கோட்டை ஜெயலட்சுமி ஆகியோருக்கு வழங்கப் பட்டது. பாலா, நந்தினி,மாஞ்சை சங்கர், முருகேசன் ஆகியோருக்கு ஒளிரும் கலைஞர்கள் விருதளிக்கப்பட்டது புதுகை பூபாளம் கலைக் குழுவின் நய்யாண்டி தர்பார் நடைபெற்றது.

கரிசல் கருணாநிதி,புதுகை சுகந்தி உள்ளிட்ட கலைஞர்கள் பாடல்கள் பாடினர். மாவட்ட நிர்வாகிகள் ராசி. பன்னீர் செல்வன், ஜெயபாலன், கிளை நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். பேரூராட்சி தலைவர், ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர்கள்,காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் கிளை பொருளாளர் சாமிக்ரிஷ் நன்றி கூறினார்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top