Close
நவம்பர் 22, 2024 4:56 மணி

புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன் தாயார் மறைவுக்கு அமைச்சர்கள் உள்பட திரளானோர் அஞ்சலி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கம்பன் கழகத்தலைவர் எஸ்.ராமச்சந்திரன் தாயார் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள்

புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன் தாயாரின் இறுதிச்சடங்கில் தமிழக அமைச்சர்கள் உள்பட திரளானோர்  நேரில் அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் S.R என்கிற எஸ்.  ராமச்சந்திரன் தாயாரின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் ரகுபதி உள்பட திரளானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பட்டிணம் கிராமம் காலம் சென்ற பெரி.சண்முகம் அம்பலகாரர் மனைவியாரும், தொழிலதிபரும் புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவரு மான எஸ்.ராமசந்திரன் (S.R) தாயாருமான முத்தாத்தாள் அம்மாள் (11.05.2023) வியாழக்கிழமை இரவு இயற்கை எய்தினார். அம்மையாரின் இறுதி ஊர்வலம் நல்லடக்கம் நேற்று வெள்ளிக்கிழமை (12.05.2023) புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் உள்ள முத்துப்பட்டிணத்தில் நடைப்பெற்றது.

இதில், தமிழக அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன், ப.மூர்த்தி, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்  ஆர். சுரேஷ்குமார்,  தொழிலதிபர் சேகர் ரெட்டி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே. செல்லபாண்டியன், புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை. முத்துராஜா,  சட்டமன்ற உறுப்பினர்- முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எம்எல்ஏ-க்கள் திண்டுக்கல் சீனிவாசன்,  எம். சின்னத்துரை, திருவையாறு சந்திரசேகரன், பேராவூரணி அசோகன், முன்னாள் எம்பி எஸ்.எஸ். பழனிமாணிக்கம்.

முன்னாள் எம்எல்ஏக்கள் கதிரவன், ராமசுப்புரம், நடிகர் கருணாஸ், கார்த்திக் தொண்டைமான், அரசியல் கட்சி பிரமுகர்கள் சசிகலாவின் சகோதரர் மன்னார்குடி திவாகரன், எச். ராஜா,  திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், கம்பன்கழகச்செயலர் ஆர். சம்பத்குமார்,  சேர்மன்கள் திலகவதி செந்தில், மாலா ராஜேந்திரன், வள்ளியம்மை தங்கமணி, தொழிலதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன், நத்தம் கண்ணன், விஜய ரவி பல்லவராயர், பண்ண வயல் ராஜா தம்பி பாஸ்கர்.

முன்னாள் நகர் மன்றத்தலைவர் ராஜே ராஜசேகரன், பேராசிரியர் தங்க ரவிசங்கர், பேக்கரி மகராஜ் அருண் சின்னப்பா, கடம்பூர் ராஜா, சென்னை பாலாஜி, அந்தோணி திண்டுக்கல் ஜெகன், புதுகை வரலாறு  நாளிதழ் நிறுவனர் சிவசக்திவேல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், கவிஞர்கள்,  உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மையாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top