Close
நவம்பர் 22, 2024 8:26 மணி

தஞ்சையில் சாலையோர வியாபாரிகளை பாதுகாக்கக்கோரி ஏஐடியுசி தொழில்சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழில் சங்கத்தினர்

தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன்பு பூக்கள் மற்றும் பல்வேறு வியாபாரம் செய்யும் தொழிலாளர்களை மாநகராட்சி நிர்வாகம் அந்த இடத்தில் அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி ஏஐடியுசி தெரு வியாபார தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையம் முன்பும், எதிர் புறமும் பூ வியாபாரம் செய்பவர்கள் மற்றும் வளையல், மணி உள்ளிட்ட பல்வேறு சிறிய வியாபாரம் செய்யும் தொழிலாளர்கள் போக்குவரத்திற்கு, பொதுமக்களுக்கு இடையூறு இன்றி, தங்கள் வயிற்று பிழைப்பிற்காக தன்மானத்துடன் குடும்ப நடத்திட வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களை மாநகராட்சி ஆணையர் இந்த இடத்தில் பூ மற்றும் சிறு தொழில்கள் செய்யக்கூடாது என்று அவதூறாக பேசி பூக்கள் மற்றும் பொருட்களை அள்ளித் தரையில் வீசி அடாவடியாக நடந்து கொள்ளும் செயல்களை கண்டித்து இன்று காலை 10 மணிக்கு தஞ்சை பழைய பேருந்து நிலையம் எதிரில், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன் தலைமை வகித்தார். சங்க நிர்வாகிகள் பி.கண்ணன், எம்.சத்யா , ஜெ.பிரசாத் எல்.வெண்ணிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம் தொடங்கி வைத்தார். தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் முடித்து வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தின் போது தெரு வியாபாரிகள் சட்டம் 2015-ன் படி தற்போது வியாபாரம் செய்யும் இடத்திலேயே தெரு வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். 30 வருடங்களுக்கு மேலாக பூக்கள் மற்றும் சிறு சிறு பொருட்கள் வியாபாரம் செய்யும் தொழிலாளர்களை அந்த இடத்தை விட்டு விரட்டி அடிக்க கூடாது, அவதூறாக பேசக்கூடாது , மிரட்ட கூடாது, வியாபாரம் செய்யும் இடத்தை முடிவு செய்வதற்கு வணிகக் குழுவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால் வணிக குழு தேர்தல் நடத்தும் வரை வியாபாரம் செய்பவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது , அனைவருக்கும் அவரவர் தொழில் செய்யும் இடத்திற்கு சென்று புகைப்படம் எடுத்து ஸ்மார்ட் சிட்டி அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்டத் தலைவர் வெ.சேவையா, மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன், மின்வாரிய சம்மேளன துணைத் தலைவர் பொன்.தங்கவேல், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் பி.அப்பாதுரை, டாஸ்மாக் சங்கம் மாவட்ட செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், தெரு வியாபார சங்க மாவட்டத் தலைவர் பி.சிவக்குமார், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் இரா.செந்தில்நாதன், கட்டுமான சங்கம் மாவட்ட துணை தலைவர் பி.செல்வம், உடலுழைப்பு தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பி.சுதா, கே.கல்யாணி, உள்ளிட்டோர் உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்க நிர்வாகிகள் கே.சுந்தரபாண்டியன், அ.இருதயராஜ், எஸ்.மனோகர், சமூக ஆர்வலர்கள் எம்.ஆலம்கான்,. விசிறி சாமியார் முருகன்,பூ வியாபார தொழிலாளர்கள் சுதாகர்,வெங்கடேசன், தையல்நாயகி,சுகந்தி, செல்வி, மஞ்சுளா,உஷா, வளர்மதி,மகிழம்பாள், நாகலட்சுமி, செங்காயி,ஆச்சி, மலர் அண்ணாமலை, சுப்பிரமணியன், பரமசிவம் உள்ளிட்டு ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகரத் தலைவர் ஆர்.பிரபாகர் நன்றி கூறினார்.
படவிளக்கம்::
தஞ்சையில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செய்தி:::  துரை.மதிவாணன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top