Close
செப்டம்பர் 20, 2024 6:34 காலை

புதுக்கோட்டை நடராஜ பெருமானுக்கு சிறப்பு வழிபாடு  

புதுக்கோட்டை

புதுக்கோட்டைவடக்கு ராஜ வீதியில் சுந்தரம் அடிகளார் இல்லத்தில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு வழிபாடுநடைபெற்றது

புதுக்கோட்டைவடக்கு ராஜ வீதியில்நடராஜ பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது                                                                                                                                                                                                                  புதுக்கோட்டைவடக்கு ராஜ வீதியில்  சுந்தரம் அடிகளார் இல்லத்தில்    நடராஜ பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் , நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்த தாகும். அதன் படி, உற்சவர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப் பொடி, வில்வப் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் நடராஜ பெருமான், சிவகாமி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. நடராஜ பெருமான், சிவகாமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதைத்தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம், நடராஜப் பத்து முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை  நடராஜர் வழிபாட்டு குழு நிர்வாகி  சுந்தரம் அடிகளார் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். அனைவருக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது .

நடராஜ பெருமானுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆறு நாட்கள் மட்டுமே சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், வரும் ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் ஆகிய விசேஷங்கள்  நடைபெறும்.  அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதைப் போலவே மாசி மாதம் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top