புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க காந்தி நகர் கிளை சார்பில் மாணவர்களுக்கான கோடைகால இலவச பயிற்சி (சிலம்பம், களரி) வகுப்புகள் தொடங்கப்பட்டது.
இப்பயிற்சி வகுப்பை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் ஆ. குமாரவேல் துவக்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அனைத்து பதிவுற்ற மருந்தாளுநர்கள் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்திக் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
காந்தி நகர் கிளை தலைவர் இதயம் முரளி தலைமை வகித்தார். நிகழ்வில் புதுக்கோட்டை நகர செயலாளர் ஜெகன், நகர துணை தலைவர் நித்திஸ்குமார்,நகர குழு உறுப்பினர் பாரதி, கிளை பொருளாளர் மணிமாறன், மற்றும் அன்புமணி, முகேஷ், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பாண்டியன் சிலம்பம் பாசறையின் பயிற்சியாளர் கார்த்திக் சிறுவர் சிறுமியர்களுக்கு சிலம்பம் மற்றும் களரி கலைகளை பயிற்சி அளித்தார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (Democratic Youth Federation of India) இந்தியாவின் மிகப் பெரிய வாலிபர் அமைப்பாக கருதப்படுகிறது. இது 3.11. 1980 -ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உருவாகப்பட்ட அமைப்பாகும். தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைப்புகளை கொண்டுள்ளது.
2021 ஆண்டு நிலவரப்படி இந்திய அளவில் 2.20 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். தெரு பிரச்னை முதல் தேசப் பிரச்சனை வரை அனைத்திலும் தலையிடக் கூடிய அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
சாதி, மத மோதலுக்கு எதிராக செயல்படுகிறது. தேசிய ஒருமைப்பாடு – ஒற்றுமையை வளர்க்கும் வேலையில் ஈடுப்பட்டு வருகிறது. எல்லோருக்கும் இலவச கல்வி, எல்லோருக்கும் சமூக பாதுகாப்பான வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து இயங்கி வருகிறது. 15 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் உறுப்பினராக சேர்ந்து கொள்ள தகுதி உள்ளது. ஆண்-பெண், ஏழை பணக்காரன் சாதி, மதம் எதுவும் உறுப்பினராக சேர தடை கிடையாது.