Close
நவம்பர் 22, 2024 6:53 காலை

புதுக்கோட்டை அருகே நடந்த ஜல்லிக்கட்டு: மாடு முட்டி 10 பேர் காயம்

புதுக்கோட்டை

புதுகை அருகே மருதாந்தலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை அருகே மருதான்தலை ஸ்ரீ நவளிகாடு அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே மருதாந்தலை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நவளிகாடு அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி அய்யனார் கோவில் திடலில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 850 காளைகளும் அதே போன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

ஆறு சுற்றுக்களாக போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு சுற்றிலும் மாடுபிடி வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். வாடி வாசலில் இருந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டனர்.

இந்தக் காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு அடக்கினர். இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்கள் கையில் சிக்காமல் சீறிப்பாய்ந்து போக்கு காட்டி சென்றன. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பரிசுகள் மற்றும் சில்வர் அண்டா, கட்டில், பீரோ, சேர், டைனிங் டேபிள், ட்ரெஸ்ஸிங் டேபிள், சைக்கிள், குக்கர் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top