Close
செப்டம்பர் 20, 2024 4:11 காலை

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் தியாகிகளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி

இடது சாரிகள் பொது மேடை சார்பில் தஞ்சையில் நடைபெற்ற முள்ளி வாய்க்கால் தியாகிகளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஈழத் தமிழர்கள் உரிமைகளை பெற்றிட துணை நிற்போம் என உறுதியேற்பு.

கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழீழப் போரில் சிங்கள இனவெறி அரசாங்கத்தால், இராணுவத்தால் முள்ளிவாய்க்கால் என்ற இடத்தில் மே மாதம் 17,18,19 தேதிகளில் ஈழத்தமிழர்கள் கொத்துக்,கொத்தாக ஏறத்தாழ 1.5 லட்சம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

போரில் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் தியாகிகளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் இடதுசாரிகள் பொது மேடை சார்பில் இன்று காலை  நடைபெற்றது.

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி அரசாங்கத்தை, இராணுவத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கப்பட வேண்டும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், ஈழப் போரின் போது காணாமல் போன சிறுவர், சிறுமியர்கள், பெண்கள், முதியவர்கள், ஆண்கள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான பேர் காணாமல் போய் உள்ளனர்.

இவர்களைப் பற்றிய உண்மை நிலவரத்தை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும். சிங்களவர்களால் ஆக்ரமிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்விடங்கள் மீட்கப்பட வேண்டும். தமிழர்கள் குடியேற்றப்பட வேண்டும்,. தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களை சுதந்திரமாக வாழ வைக்க வேண்டும்.

அவர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்று தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழ்நாடு அரசாங்கத் திற்கும், ஒன்றிய அரசாங்கத்திற்கும். உலக நாடுகள் மற்றும் ஐநா சபைக்கும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. முடிவில் தமிழீழத்திற்கும், தமிழர்களுக்கும் ஆதரவாக இருப்போம், அவர்களின் தன்னுரிமைகளைப் பெற துணைநிற்போம் என்று உறுதி ஏற்கப்பட்டது.

நிகழ்வுக்கு, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, மாநகரத் துணைச் செயலாளர் ஆர்.பி .முத்துக்குமரன்.

முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்ற தலைவர் ,போராசிரியர் வி.பாரி, மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் தேவா,தமிழ் தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்சோரி, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ்.ஏ .பி.சேவியர்,

ஆதித்தமிழர் இளைஞர் பேரவை பொறுப்பாளர்கள் வ.பிரேம்குமார்நிவாஸ், சிவா மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகள் கணபதி, சத்யா, வெண்ணிலா , கண்ணன், தங்கராசு,. ரெஜினால்டுரவீந்திரன், செல்வம், எஸ் .மனோகர், தாமரைச்செல்வன், கஸ்தூரி, கோதண்டபாணி, முருகவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top