Close
நவம்பர் 22, 2024 12:45 மணி

எஸ்எஸ்எல்சி தேர்வு: புதுக்கோட்டை மாவட்டத்தில் 92.31 % தேர்ச்சி

புதுக்கோட்டை

10 மற்றும் 11 -ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில்  92.31% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 331 பள்ளிகளில் இருந்து, 12,041 மாணவர்களும், 12,223 மாணவிகளும் என மொத்தம் 24,264 பேர்  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இவர்களில் 10,768 மாணவர்களும், 11,630 மாணவிகளும் என மொத்தம் 22,398 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம்  92.31 சதவிகிதமாகும்.

மாநிலப் பட்டியலில் கடந்த 2022ஆம் ஆண்டில் 30 -ஆவது இடத்தில் இருந்த புதுக்கோட்டை மாவட்டம், நிகழ் ஆண்டில் (2023)  16ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மாவட்டத்தில் 100 % தேர்ச்சி பெற்ற பள்ளிகள்:86 பள்ளிகள் 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றுள்ளன. இவற்றில் 26 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும்.

100 % தேர்ச்சி பெற்றுள்ள அரசுப் பள்ளிகள்: ஆவுடையார்கோவில், கோட்டைப்பட்டினம், எருக்கலாக் கோட்டை, எஸ். குளவாய்ப்பட்டி, பள்ளத்திவிடுதி, பெரியலூர் கிழக்கு, நற்பவளசெங்கமாரி, இடையாத்திமங்கலம், அமரசிம்மேந்திரபுரம், அரையப்பட்டி, பூவைமாநகர், தாந்தாணி,  ஆயிங்குடி தெற்கு, அரசர்குளம் கிழக்கு, சூரன்விடுதி, தாளனூர், பொன்பேத்தி, பொன்னாகரம், நீர்ப்பழனி, கிளிக்குடி, மதியநல்லூர், மேலப்பட்டி, அக்கல்நாயக்கன்பட்டி, பாக்குடி, குருங்களூர், சம்மட்டிவிடுதி.

பிளஸ் 1 முடிவுகள் மாவட்டத்தில்  86.99  %  தேர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 20 பள்ளிகள் 100%  தேர்ச்சி பெற்றுள்ளன. இதில்  அரசுப் பள்ளி.தாந்தாணி  அரசு மேல்நிலைப் பள்ளி மட்டும்.

மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) பொதுத்தேர்வில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 173 பள்ளிகளில் இருந்து, 8,430 மாணவர்களும், 9,887 மாணவிகளும் என மொத்தம் 18,317 பேர் தேர்வெழுதினர்.

இவர்களில், 6,825 மாணவர்களும், 9,109 மாணவிகளும் என மொத்தம் 15,934 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம்   86.99  %  விகிதமாகும். மாநிலப் பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டம் கடந்த 2022 -ஆம் ஆண்டில் 27 -ஆவது இடத்தில் இருந்து, நிகழாண்டில் 2023 -ஆம் ஆண்டில் 30 -ஆவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top