மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தொழிற் சங்கத்தின் புதுக்கோட்டை திட்டத் தலைவர் எஸ்.சின்னத்தம்பி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி திட்டச் செயலாளர் கே.நடராஜன், பொருளாளர் ஆறுமுகம், கீரனூர் கோட்டச் செயலாளர் சின்னத்தம்பி, அறந்தாங்கி கோட்டச் செயலாளர் டி.விஜயகுமார் உள்ளிட்டோர் பேசினர்.
மின்வாரியத்தில் பணிபுரிகின்ற 10 ஆயிரம் கேங்மேன் மற்றும் பகுதி நேரப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் வாக்குறிதியில் அறிவித்தபடி 10 ஆண்டுகள் பணிமுடித்த தொழிலாளர்களை நிரந்தப்படுத்த வேண்டம். காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். அவுட் சோர்சிங் என்ற பெயரில் மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வாரக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.