Close
நவம்பர் 24, 2024 10:31 காலை

புத்தகம் அறிவோம்.. கேட்டதெல்லாம் போதும்…

நூல்அரங்கம்

புத்தகம் அறிவோம். கேட்டதெல்லாம் போதும்

ர.சு.நல்லபெருமாள் (நவம்பர் 1930- ஏப்ரல் 20, 2011)தமிழ் எழுத்தாளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர். சிறந்த நாவலாசிரியராகவும், வழக்கறிஞராகவும் விழங்கியவர். காந்தியத்தின் மீது நம்பிக்கை கொண்டவராகவும், பொதுவுடையின் மீது அவநம்பிக்கையும் கொண்டவர்.

கல்லுக்குள் ஈரம், குருசேத்திரம், நம்பிக்கைகள், போராட்டங்கள் அவருடைய குறிப்பிடத்தக்க நாவல்கள். சிந்தனை வகுத்த வழி, இந்தியச் சிந்தனை மரபு , பிரும்ம ரகசியம் போன்றவை சிந்தனையை தூண்டும் அருமையான நூல்கள்.

இந்த’ கேட்டதெல்லாம் போதும்,’ சித்தார்த்தன் அரச பதவி யைத் துறந்து நாட்டைவிட்டு வெளியேறி 6 ஆண்டுக ளுக்குப் பிறகு போதி மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்று புத்தரானார் என்பது வரலாறு. ஆனால் 6 ஆண்டுகள் எங்கே போனார், என்ன செய்தார், யாரோடெல்லாம் உரையாடினார் என்பதைப்பற்றியெல்லாம் திட்டவட்டமான வரலாறு கிடையாது.

அந்த ஆறு ஆண்டுகளில் யாரைச்சந்தித்தார், யாரோடெல்லாம் தர்க்கம் புரிந்தார், எங்கேயெல்லாம் சுற்றினார் இறுதியாக ஆனந்தன் என்பவனின் வேட்டையாடுதலைப் பார்த்து, போதி மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றது வரை கற்பனையாக, சிந்தனையைத் தூண்டும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் இது.வானதி வெளியீடு.  ர.சு.நல்லபெருமாள் எழுதிய நூல்கள் யாவற்றையும் இந்தப் பதிப்பகம்தான் வெளியிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top