Close
நவம்பர் 23, 2024 3:09 காலை

பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளிக்கும் இயக்கம் நடத்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி தீர்மானம்

தஞ்சாவூர்

தஞ்சையில் நடைபெற்றஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநிலப் பொதுக்குழ கூட்டம்

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் களிடம் மனு அளிக்கும் இயக்கம்  ஜூன் 16 முதல் 20 -ஆம் தேதி வரை நடத்துவதென தஞ்சையில் நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநிலப் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி தமிழ்நாடு மாநில பொதுக் குழு கூட்டம், 23.05.2023 (செவ்வாய் கிழமை) காலை 11 மணிக்கு தஞ்சாவூர் எல்.ஐ.சி ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன் வரவேற்புரையாற்றினார்.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில நிர்வாகிகள் சாமி.நடராஜன், பி.எஸ். மாசிலாமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குணசேகரன், சந்திர மோகன், அமிர்தலிங்கம், செல்வராஜ், போஸ் , மேரிவில்லியம் , தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சு.பழனிராஜன், இரா.அருணாச்சலம், ப.அருண்சோரி உள்ளிட்டார் பங்கேற்றனர்.

கூட்டத்தில், டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஒன்றிய மோடி அரசு எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து ஏற்றுக் கொண்ட உறுதிமொழிகளான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதை சட்டமாக்குவது.

மூன்று உழவர் விரோத சட்டங்களையும் ,மின்சார சட்ட திருத்த மசோதாவையும் திரும்ப பெறுவது. தொழிலாளர் களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்புகளையும் திரும்ப பெறுவது. நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறுவது.

உத்தர பிரதேசம் லக்கி பூர்கேரியில் நடைபெற்ற விவசாயிகள் மீது ஒன்றிய அமைச்சர் மகன் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு ஒன்றிய அமைச்சர் மகன் உள்ளிட்டோர் மீதான சட்ட நடவடிக்கைகளை அமல்படுத்துவது என்ற உறுதிமொழிகளில் ஒன்றை கூட இதுவரை நிறைவேற்றவில்லை.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணியின்) முடிவின்படி நாடு முழுவதும் ஜூன் 16 முதல் 20 -ஆம் தேதி வரை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை மனு அளித்து பாராளுமன்றத்தில் பேச வைப்பது என்ற முடிவுகளின் படி தமிழ்நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து மனு அளிப்பது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

வருகிற ஜூலை மாதம் மாவட்டம் தோறும் கோரிக்கை மாநாடுகள் நடத்துவது, ஆகஸ்ட் மாதம் 12  -ஆம் தேதி அரசின் சொத்துக்கள் தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து தொழிற்சங்கங் களையும் இணைத்து கொண்டு மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்துவது.

உத்தரப்பிரதேசம் லக்கி பூர் கேரியில் நடைபெற்ற விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட தினமான அக்டோபர் 3 -ஆம் தேதி தியாகிகள் நாளாக கடைபிடிப்பது, டெல்லியில் விவசாயிகள் போராட்ட துவக்க,வெற்றி தினமான நவம்பர் 26, 27, 28  தேதிகளில் மாநில தலைநகரங்களில் தொடர் போராட்டம் நடத்துவது என்ற அடிப்படையில் சென்னையில் இரவு பகலாக மூன்று நாட்களும் தொடர் போராட்டம் நடத்துவது என ஒருவனதாக தீர்மானிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top