Close
நவம்பர் 22, 2024 10:51 மணி

திருவரங்குளம் பிடாரியம்மன் கோயில் திருவிழாவில் வடமாடு மஞ்சு விரட்டு

புதுக்கோட்டை

திருவரங்குளம் அருகே நடைபெற்ற வடமாடு ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை அருகே திருவரங்குளம் ஸ்ரீ பிடாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது .

புதுக்கோட்டை அருகே திருவரங்குலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிடாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் இன்றி திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பத்து காளைகளும் அதே போன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து 90 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் மந்தையின் நடுவே நீளமுள்ள கயிற்றில் ஒரு காளைமாடு கட்டிவிட்டு அதை அடக்க ஒன்பது பேர் கொண்ட மாடுபிடி வீரர்களையும் களத்தில் இறக்கவிட்டு 20 நிமிடம் நேரம் ஒதுக்கி போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் பத்து நிமிடம் வரை மாடுபிடி வீரர்களுக்கு போக்கு கட்டிய காளைகளை மாடு பிடி வீரர்கள் லாபமாக பிடித்து வெற்றி பெற்றனர். இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் போட்டிக்கு வந்திருந்த அனைத்து காளைகளுக்கும் மாலை மரியாதை செய்யப்பட்டு மாட்டின் உரிமையாளர் களுக்கு குக்கர் பரிசாக வழங்கப்பட்டன. இந்த போட்டியினை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான சுற்றி அமர்ந்து ஆரவாரத்துடன் கைதட்டி உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top