புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நிலைய முதல்வர் குப்புராஜ் தலைமையில் மரம் அறக்கட்ட ளை நிறுவனர் மரம் இராஜா முன்னிலையில் மரம் நடுவிழா நடைபெற்றது.
நிகழ்வில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் செல்வகுமார், நத்தம் பண்ணை ஊராட்சி தலைவர் ஏ வி.எம் பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஐடிஐ வளாகத்திற்குள் 125 மரக் கன்றுகளை நடவு செய்தனர்.
முன்னதாக, புதுக்கோட்டையை பசுமைக் கோட்டையாக் குவோம்.பசுமைத்தமிழகம் படைத்திடுவோம்.புவி வெப்ப மயமாதலை தடுத்திடுவோம்
மரங்களை அதிக அளவில் நடவு செய்து மாசற்ற காற்றையும்நீரையும் உருவாக்குவோம் பாதுகாப்போம் வளர்த்தெடுப் போம் நெகிழிப்பையை தவிர்த்திடுவோம் மஞ்சள் துணிப் பையை பயன்படுத்துவோம் என மாணவ மாணவிகள் உறுதி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்வில் இருபால் பயிற்றுநர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர். ஜோதிமணி செய்திருந்தார். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுற்றுச் சூழல் துறையின் சார்பில் மஞ்சள் பை வழங்கப்பட்டது.