Close
நவம்பர் 21, 2024 8:00 மணி

புதுக்கோட்டையில் சர்வதேச செஸ் போட்டி தொடக்கம்

புதுக்கோட்டை

செந்தூரான் பொறியியல் கல்லூரியில் சாய் சரவணா அகாடெமி நடத்தும் இரண்டாவது சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டி தொடங்கியது

புதுக்கோட்டை     செந்தூரான்  பொறியியல்  கல்லூரியில் சாய் சரவணா  அகாடெமி   நடத்தும்    இரண்டாவது  சர்வதேச ரேட்டிங்  செஸ் போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை  சாய் சரவணா  அகாடெமி  நடத்தும் இரண்டாவது  சர்வதேச  ரேட்டிங்  செஸ் போட்டி    புதுக்கோட்டை   லெணா விலக்கில்  உள்ள  செந்தூரான் பொறியியல்  கல்லூரியில்  தொடங்கியது.
இப்போட்டியின்  தொடக்க  விழாவில்,   புதுக்கோட்டை மாவட்ட செஸ்  சங்கத்தலைவர்  தொழிலதிபர் எஸ். .ராமசந்திரன் தலைமை வகித்தார்.   செயலர்   பேராசிரியர்  கணேசன் அனைவரையும் வரவேற்றார்.
போட்டியை  திமுக  மாநில மருத்துவ  அணி  துணைச் செயலாளர்  டாக்டர்   அண்ணாமலை  ரகுபதி  தொடங்கி வைத்தார். செந்தூரான் கல்வி நிறுவனங்களின்  தாளாளர்கள் எஸ். செல்வராஜ், ராம. வயிரவன்,  கார்த்திக்,  சாய் சரவணா அகாடமி நிறுவனர்கள்  அங்கப்பன் மற்றும்.அடைக்கலவன், சர்வதேச  செஸ் நடுவர்கள்  தினகரன், ஆனந்தபாபு  முன்னிலை  வகித்தனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் தொடங்கிய செஸ் போட்டியில் பங்கேற்ற வீரர்கள்

மேலும்,  இந்நிகழ்வில் பாலு, சிவா, சையது மற்றும் புதுக்கோட்டை  மாவட்ட  செஸ்  சங்க பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.  புதுச்சேரி உள்பட நாட்டின்  பல்வேறு மாநிலங்களி லிருந்தும் 400  -க்கும்  மேற்பட்ட    செஸ்  வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு  கலந்து  கொண்டனர் . இன்று (மே 29) தொடங்கிய இப்போட்டி  ஐந்து நாட்கள்  நடை பெறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top