Close
நவம்பர் 22, 2024 1:53 மணி

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் விடைபெறுகிறது…

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர வெயில் தணிந்தது

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ஆம்  தேதி தொடங்கியது. வெயிலின் தாக்கம் குறையுமா என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ஆம்  தேதி தொடங்கியது.ஆனாலும் வெயிலின் தாக்கம் இல்லாமலேயே இருந்தது. ஆனால் போகப் போக வெயிலின்  கோரத் தாண்டவத்தை காட்டத் தொடங்கியது. அதிலும் அக்னி நட்சத்திரத்தின் பிற்பகுதியில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது.

கடந்த வாரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் பதிவானது. இதுதான் இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பப்பதிவாக தற்போது வரை இருந்துவருகிறது. இந்த நிலையில் வாட்டி வதைத்துவந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் (திங்கட்கிழமை) விடைபெறுகிறது.

இதற்கு பிறகாவது வெயிலின் தாக்கம் குறையுமா என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் அக்னி நட்சத்திரம் விடைபெற்றாலும், தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்னும் ஒரு வார காலத்துக்கு வெயிலின் தாக்கம் இயல்பைவிட சற்று அதிகமாகவே இருக்கும் என்றும், இன்றும், நாளையும் (செவ்வாய்க்கிழமை) ஓரிரு இடங்களில் 100 டிகிரி முதல் 104 டிகிரி வரை வெயில் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top