புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024- ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை (UG) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 31.05.2023 புதன்கிழமை அன்று முதல் தொடங்க உள்ளது.
31.05.2023 காலை 10 மணிக்கு முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகன், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், NCC, அந்தமான நிகோபார் (தமிழ் குடிகள்), பாதுகாப்பு படையினரின் குழந்தைகள் முதலான சிறப்பு ‘ஒதுக்கீட்டு பிரிவிற்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது.
முதற்கட்ட கலந்தாய்வு 01.06.2023 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு பி.காம் வணிகவியல் (B.Com Commerce) பாடப்பிரிவிற்கும். 03.06.2023 சனிக்கிழமை காலை 10 மணிக்கு பீ.எஸ்சி கணினி அறிவியல் மற்றும் பி.எஸ்சி கணிதம் பாடப்பிரிவிற்கும், 06.06.2023 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கில பாடப்பிரிவிற்கும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும்.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு 12.06.2023 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு பி.காம் வணிகவியல் (B.Com Commerce) பாடப் பிரிவிற்கும். 14.06.2023 புதன்கிழமை காலை 10 மணிக்கு பி.எஸ்சி கணினி அறிவியல் மற்றும் பி.எஸ்சி கணிதம் பாடப்பிரிவிற்கும், 16.06.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம் பாடப்பிரிவிற்கும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும்.
மேலும் கொண்டுவரப்பட வேண்டிய சான்றிதழ்கள் விவரம், 10th, +1 மற்றும் +2 மதிப்பெண் சான்றிதழ் (அசல், நகல் 3), +2 மாற்றுச்சான்றிதழ் (அசல், நகல் 3). சாதிச்சான்றிதழ் (அசல், நகல் 3). இணையவழியில் பதிவு செய்த விண்ணப்பம் (அனைத்து பக்கங்கள்) நகல் 2. வருமான சான்றிதழ் நகல் 2. ஆதார் கார்டு நகல் 2. வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் 2. பாஸ்போர்ட் சைஸ் போட்டா நகல் 4. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினர் அதற்குரிய மூலச்சான்று அசல் மற்றும் நகல்-2, அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் ஆகும் என திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ம.சண்முகவள்ளி அவர்கள் தெரிவித்துள்ளார்.