ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஊத்துக்குளியில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, தமிழகத் தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருள் புழக்கம், என சட்டம், ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசை கண்டித்தும்,
இதற்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும். அதிமுக ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில,பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி ஒன்றியத்தில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடுபுறநகர்கிழக்குமாவட்ட செயலாளரும், பவானி சட்டமன்ற உறுப்பினருமானகே.சி.கருப்பணன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் திமுக அரசைக்கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதில், பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி செல்வராஜ், வைகை தம்பி என்கிற ரஞ்சித்ராஜ்,எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை,எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் அணி, மருத்துவர் அணி, இலக்கிய அணி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை, வர்த்தக அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு உட்பட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.