Close
நவம்பர் 24, 2024 12:54 மணி

உலக புகையிலை ஒழிப்பு தினம்: புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை துணைஇயக்குநர் சுகாதாரப்பணிகள்அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும், அலுவலக வாயிலில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

புதுக்கோட்டை சுகாதார மாவட்டப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மே-31 ம் நாள் உலக புகையிலை ஒழிப்பு தினமாக அனுசரித்து, அன்று புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக துணைஇயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.ச.ராம்கணேஷ்  அறிவுறுத்தலின்படி, துணைஇயக்குநர் சுகாதாரப்பணிகள் புதுக்கோட்டை அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களும், அலுவலக வாயிலில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதேபோன்று, திருமயம் வட்டாரத்தைச் சேர்ந்த வட்டார ஆரம்ப சுகாதார  நிலையத்தில் மருத்துவ அலுவலர் தலைமையில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாகைகள், துண்டுபிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதேபோன்று, அன்னவாசல், பொன்னமராவதி, அரிமளம், குன்னன்டார்கோவில், புதுக்கோட்டை மற்றும் விராலிமலை வட்டாரப்பகுதிகளில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த அனைத்து நிகழ்வுகளையும் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மற்றும் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் ஆகியோரின் மேற்பார்வையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top