எண்ணூர் எர்ணாவூர் நேதாஜி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தேவே கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
.
எண்ணூர் எர்ணாவூர் நேதாஜி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியம் தலைவர் ஏ. நாராயணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக யாக சாலைகள் அமைக்கப்பட்டு பல்வேறு வகையான் யாகங்களும், அம்மனுக்கு தொடர் பூஜைகளும் நடைபெற்றன். இதனைத் தொடர்ந்து திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய குருக்கள் சந்துரு குழுவினர் கலசங்களில் புனிதநீரை ஊற்றி வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து புனித நீர் அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, மேற்கு பகுதி தி.மு.க செயலாளர் வை.ம.அருள்தாசன், சமத்துவ மக்கள் கழகம் இளைஞரணி செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.