Close
செப்டம்பர் 20, 2024 5:25 காலை

நிலம் கையகப்படுத்தியதில் உள்ள குறைகளை பொதுமக்கள் மனுவாக அளிக்கலாம்

புதுக்கோட்டை

நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக மனு அளிக்கலாம்

தமிழ்நாடு முதலமைச்சர்  அறிவுரையின்படி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்திட நிலங்கள் கையகப் படுத்தப்பட்டது.

இது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்ததன் தொடர்ச்சியாக திருச்சி வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தில் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து மனுக்களானது வரவேற்கப்பட்டு ஜுன் மாதம் 3 -ஆம் தேதியிலிருந்து கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட இருக்கின்றன.

அது சமயம் அலுவலக வேலை நாட்களில் வீட்டு வசதி தொடர்பான மனுக்களை பொது மக்கள் மனு செய்து அரசிடமிருந்து தீர்வுகள் பெற்றுக்கொள்ளலாம்.

எனவே மக்களின் குறைதீர்க்க தமிழ்நாடு முதலமைச்சரின் முன்னெடுப்பு திட்டம் மூலம் மனு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது என செயற் பொறியாளர் (ம) நிர்வாக அலுவலர் (திருச்சி வீட்டு வசதிப் பிரிவு)  இரா.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top