Close
செப்டம்பர் 20, 2024 6:20 காலை

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்திட்ட வீடு கட்டும் திட்டம்

புதுக்கோட்டை

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த அறந்தாங்கி பகுதி மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு திட்டத்தின் கீழ் மிகவும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள வீடு இல்லாத 120 குடும்பங்களுக்கு மத்திய அரசு மாநில அரசுகளின் பங்களிப்பில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக அறந்தாங்கியில் 120 அடுக்குமாடிகள் கட்டப்பட்டன.

சென்ற ஆண்டு 2022-ல் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் ஒவ்வொருவரும் ஒரு லட்சம் ரூபாய் கட்டினால் தான் வீடு தரப்படும் என்று வாரியம் கூறியதன் பேரில், பயனாளிகள் கையில் இருந்த பொருட்களை அடமானம் வைத்தும், சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு அனைத்து பயனாளிகளும் பணம் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் 3.6.2023 அன்று பயனாளிகளை அழைத்து வாரியத்தின் அதிகாரிகள் கட்டுமான பொருட்கள் விலை அதிகமாகி விட்டதாகவும் மின்வாரியத்திற்கு கூடுதல் பணம் செலுத்த வேண்டிய உள்ளதாகவும் என பயனாளிகள் தல ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் செலுத்த வேண்டும் என  வாரியம் கூறியுள்ளது.

இதனால்,  பயனாளிகள் பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் ஏற்கெனவே கடன் வாங்கி கட்டிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாமலும் வாழ்வதற்கே வழியில்லாமலும் இருந்து வருகின்றனர். இந்நிலையில், பயனாளிகள் தேர்வு செய்யும் பொழுது இலவச வீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தேர்வு செய்து சில மாதங்கள் கழித்து பயனாளிகள் அனைவரும் ஒரு லட்சம் ரூபாய் மட்டும் கட்டினால் போதும் என்று கூறிவிட்டு தற்பொழுது மேலும் மேலும் பணம் செலுத்த சொல்வதால் பயனாளிகள் செய்வதறியாது  தவித்து வருகின்றனர்.

எனவே, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புக்கு மேலும் கூடுதலாக பணம் கேட்பதை தவிர்த்து உடனடியாக வீடுகளை வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 50  -க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top