தமிழ்நாடு முழுவதும் 37 சிறுதானிய உணவகங்கள் ரூ. 1.85 கோடிக்கு அமைத்திட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டது.அதில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஒரு ”சிறுதானியஉணவகம்” மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் வழிகாட்டி நெறிமுறைகளின்படி அமைத்திட ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இச்சிறுத்தானிய உணவகம் தகுதி வாய்ந்த சுய உதவிக்குழு உறுப்பினருக்கு வழங்கப்படவுள்ளது. சிறுதானிய உணவகம் அமைக்க தகுதி வாய்ந்த விருப்பமுள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்கள் / உற்பத்தியாளர் குழுக்கள்/ கூட்டமைப்பு களிடமிருந்து தேர்வு செய்து வழங்கப்பட்டவுள்ளது.
விண்ணப்பம் செய்யும் சுய உதவிக்குழுவினருக்கு கீழ்க்கண்டதகுதிகள் இருத்தல் அவசியம்.மகளிர் குழு துவங்கப்பட்டு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்று இருக்கவேண்டும் NRLM MIS இணைய தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். கூட்டமைப்பாகஇருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு A அல்லது B சான்று பெற்றிருக்க வேண்டும்.
உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும். சிறுதானிய உணவகம் அமைக்க தகுதி வாய்ந்தவிருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள்/உற்பத்தியாளர் குழுக்கள் / கூட்டமைப்பு, சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறு தானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும். மாவட்டஆட்சித் தலைவர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழு/ உற்பத்தியாளர் குழுக்கள் / கூட்டமைப்பு மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.
தகுதி உள்ள சுய உதவிக்குழுக்கள் இல்லை எனில் சம்பந்தப்பட்ட குழு கூட்டமைப்பு தீர்மானத்தின் அடிப்படையில் அருகாமையில் உள்ள வேறு மகளிர் குழுக்களை தேர்வு செய்யலாம். தகுதி அடிப்படையில் மாவட்ட அளவிலான தேர்வுக் குழு இறுதி செய்யும் உறுப்பினருக்கு வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்பட்ட இச்சிறுதானிய உணவகம் நடத்துவதற்கான விதிமுறைகள், சிறுதானிய உணவகத்தில், சிறுதானிய உணவு வகைகளை தவிர்த்து வேறு பொருட்களை கட்டாயமாக விற்பனை செய்யக் கூடாது.
மேலும் வேறு எந்த பணிகளிலும் மறைமுகமாகவோ அல்லது நேடியாகவோ ஈடுபட கூடாது. சிறு தானிய உணவகத்தினை தேர்வு செய்யப்பட்ட குழு மட்டுமே நிர்வகிக்க வேண்டும். வேறு எந்த குழுவிற்கோ, தனிநபர்களுக்கோ அல்லது வேறு நிறுவனங்களின் பயன்பாட்டிற்கோ வழங்கிட கூடாது.
சிறுதானிய உணவகத்தில் எவ்விதமான நிரந்தர அல்லது தற்காலிக மாற்றங்களை சுயஉதவிக் குழு செய்திடல் கூடாது. தேவைப்படும் பட்சத்தில் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அவர்களிடம் முன் அனுமதி பெறவேண்டும்.
சிறுதானிய உணவகத்தில் விற்பனை பணியினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மட்டுமே நியமனம் செய்து கொள்ள வேண்டும். வேறு எந்தநபர்களும் கடையின் உள் இருத்தல் கூடாது.
தேர்வு செய்யப்படும் குழுவிற்கு உணவகம் நடத்திட 11 மாத காலம் மட்டுமே அனுமதி வழங்கப்படும். பின்னா சுழற்சி, விற்பனைமற்றும் திறன் அடிப்படையில் தொடர்ந்து 2 முறை அனுமதி வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் மகளிர் சுய உதவிக்குழு மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்துடன் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.
சிறுதானிய உணவகத்தின் பெயரில் புதிய வங்கி கணக்கு துவங்கி அதில் தினசரி விற்பனை உள்ளிட்ட அனைத்து வரவு செலவுகளை மேற்கொள்ள வேண்டும். மின்னனு மூலம் பணபரிவர்தனை செய்திடும் வகையில் (QR Code) இருத்தல் வேண்டும்.
சிறு தானிய உணவகம் நடத்திடும் மகளிர் குழு சீருடை, தலையுறை மற்றும் கையுறை கண்டிப்பாக அணிந்திருத்தல் வேண்டும். சிறுதானிய உணவகத்திற்கு பிரத்தியோகமாக உணவு கட்டுப்பாட்டு துறையிலிருந்து FSSAI சான்று பெற்றிருக்க வேண்டும்.
அரசால் தடை செய்யப்பட்ட எவ்வித பொருட்களும் விற்பனை செய்யக் கூடாது.விண்ணப்பங்களை இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM), DSMS வணிகவளாகம், காட்டுபுதுக்குளம், புதிய பேருந்து நிலையம் அருகில், புதுக்கோட்டை 622001 -என்ற முகவரியில் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.