Close
நவம்பர் 24, 2024 11:50 மணி

புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் சான்றோர்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை

புதுக்கோடையில் வாசகர் பேரவை சார்பில் நடைபெற்ற விழாவில் பாராட்டப்பெற்ற சான்றோர்கள்

புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் , புதுக்கோட்டையின் மூன்று முக்கிய மூத்த குடிமக்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை பழனியப்பா நகரிலுள்ள அறிவு பெட்டகம் ஞானலயா நூலகத்திஸ் நடந்விழாவிற்கு வாசகர் பேரவை தலைவர் ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்து விழாவை தொடக்கி வைத்தார்..

விழாவில், அகவை 90 ஐ நிறைவு செய்துள்ள நல்லாசிரியர் மற்றும் மேனாள் முதன்மைக் கல்வி அலுவலர் (பநி) சி.சிவாஜி, அகவை 75 ஐ நிறைவு செய்த மேனாள் நிர்வாக அலுவலர் (பநி) காவல்துறைத்தலைவர் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சி மற்றும் தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மேனாள் தலைவர் ச. சுதந்திரராஜன், அகவை 60 ஐ நிறைவு செய்துள்ள, பாரம்பரிய மிக்க  தினமணி பத்திரிகையின் மேனாள் முதுநிலை உதவி ஆசிரியர் (பநி), புதுக்கோட்டையின் மூத்த பத்திரிக்கையாளர் மோகன்ராம் ஆகிய மூவரும் பாராட்டுப் பெற்றனர்.

புதுக்கோட்டை
வாசகர் பேரவை விழா

சிவாஜி  அர்ப்பணிப்புடனும் நேர்மையாகவும் பணியாற்றிய நல்லாசிரியர். மாணவர்களின் அன்பைப் பெற்றவர். அவரிடம் பயின்ற மாணவர்கள் பலரும் உயர் பொறுப்பில் இருப்பதாகவும் ,பணியிலிருந்து ஒய்வு பெற்றிருந்தாலும் இன்றும் அவருடைய மாணவர்கள் அவரை அன்புடனும் நேசத்துடனும் பார்க்கின்றனர் என்று சிவாஜி அவர்களின் பெருமைகளை நினைவு கூர்ந்தார் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி.

இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று பிறந்து, காவல்துறை அமைச்சுப்பணியில் சிறப்பாகப் பணியாற்றி,தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தை தொடங்கியவர்களில் ஒருவராகவும், நீண்டகாலம் அச்சங்கத்தை வழிநடத்தியதில் மிக முக்கிய பங்காற்றியவர் சுதந்திரராஜன்.

இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியுடன் பணியாற்றிவர். தமிழகத்தின் முதல்வர்கள் பலரோடு நேருக்கு நேர் அமர்ந்து பேசிய அனுபவம் பெற்றவர். மிகச்சிறந்த வாசிப்பாளர் என்று சுதந்திரராஜனைப் பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார், இளங்கோவடிகள் இலக்கிய மன்ற பொருளாளர் சத்தியராம் ராமுக்கண்ணு.

தினமணி பத்திரிக்கையில் நீண்டகாலம் பணியாற்றி இறுதியாக அப்பத்திரிகையின் முதுநிலை  உதவி ஆசிரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் .மோகன்ராம். செய்திகளை தெளிவாகவும், துள்ளியமாகவும் தருவதில் வல்லவர்.

தற்போது  இணைய தள செய்தி நிறுவனத்தில் துணை ஆசிரியராக  பணியாற்றி தனது இருப்பைத் தொடர்கிறார். புதுக்கோட்டை வாசகர் பேரவை எனும் அமைப்பு உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் இவர் என்பது  குறிப்பிடத்தக்கது என்றார் வாசகர் பேரவைச் செயலர் சா.விஸ்வநாதன்.

இந்த பாராட்டு விழாவில் மருத்துவர் ச.ராம்தாஸ், எழுத்தாளர் ஆரோக்கியசாமி, மேனாள் ரோட்டரி ஆளுனர் அ.லெ. சொக்கலிங்கம், மன்னர் கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் நாகேஸ்வரன், ஒய்வு பெற்ற காவல் அதிகாரி ராஜமாணிக்கம், சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு மூன்று பெருமக்களையும் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக வாசகர் பேரவைச் செயலர் சா.விஸ்வநாதன் வரவேற்புரையாற்றினார். நிறைவாக சத்தியராம் ராமுக்கண்ணு நன்றி கூறினார்,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top