Close
நவம்பர் 22, 2024 12:49 மணி

மேலூர் கிராமத்தில் மழை நீர் வரத்துவாரி ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார கோரிக்கை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே மேலூர் கிராமத்தில் மழை நீர் வரத்துவாரியை சீரமைக்க மக்கள் கோரிக்கை

மழைநீர் வரத்து வாரியை ஆக்கிரமித்தவர்களிடம் இருந்து மீட்டு வரத்து வாரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென  மேலூர்  கிராம மக்கள்  மாவட்ட நிர்வாகத்திடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் மேலூர் கிராமத்தில் உள்ள உலகநாயகி அம்மன் கோவில் மேலக் கொல்லை பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர்  தொலைவுக்கு  மழை நீர் வரத்து வாரி உள்ளது.

இந்த வாரியின் வழியாக மழை நீர் பேய் குளம் மற்றும் ஆலங்குளத்திற்கு  சென்று சேரும்.  இந்த தண்ணீரை வைத்து 20 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், மழைநீர் வரத்து வாரியை  ஆக்கிரமித்து   ஒரு சிலர் வீடு கட்டி உள்ளனர். இதன் காரணமாக மழை நீர் வரத்து வாரி தூர்ந்து போனதுடன்  முள்புதர்கள் மண்டி கிடக்கின்றன. மழை நீர் வரத்து வாரிய ஆக்கிரமித்துள்ளவர் அப்பகுதியில் உள்ள பாதையையும்  அடைத்து விட்டதால் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அந்த வழியாக செல்ல முடியாமல் சிரமப்பட்டு  வருகின்றனர்.

புதுக்கோட்டை
மேலூர் கிராமத்தில் பாதையாக மாறிப்போன வரத்துவாரி

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மழைநீர் வரத்து வாரி வழியாக வரும் தண்ணீரை வைத்து தான் நாங்கள் விவசாயம் செய்து வந்தோம் . மழை நீர் வரத்துவாரி தூர்ந்து போனதால் தற்போது  எங்களால்  விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளோம்.

இப்பிரச்னை தொடர்பாக பலமுறை அரசு அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. மேலும் , இந்தப்பாதை அடைக்கப்பட்டுள் ளதால் மாணவ மாணவிகள் வேறு வழியாக வெகு தொலைவு சுற்றி பள்ளிக்கு செல்லும்  செல்கின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி மழைகாலம் தொடங்கும் முன்னதாக மழைநீர் வரத்து வாரியை தூர் வாரியும் அடைத்து வைத்துள்ள  பாதையை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top