Close
நவம்பர் 22, 2024 11:38 காலை

11 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிக்கு பாராட்டு

புதுக்கோட்டை

வாசகர் பேரவை சார்பில் மதியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு.

11 ஆண்டுகளாக தொடர்ச்சியாக 10 வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்று வரும்  மதியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், மதியநல்லூர் அரசு உயர் நிலைப்பள்ளி கடந்த 11 ஆண்டு களாக தொடர்ச்சியாக 10 -ஆம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சியைப் பெற்று வருகிறது.

அதற்குக் காரணமான, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்களையும், முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளையும் புதுக்கோட்டை “வாசகர் பேரவை”  (16.06.2023) வெள்ளிக்கிழமை பாராட்டி பெருமைப்படுத்தியது.

இந்நிகழ்விற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அ. தர்மசேகர் தலைமை வகித்தார்.வாசகர் பேரவைச் செயலர் சா.விஸ்வநாதன் அறிமுக உரையாற்றினார். வாசகர் பேரவை உறுப்பினர்கள் சத்தியராம் மு.ராமுக்கண்ணு, ரோட்டரி மேனாள் ஆளுனர் அ.லெ.சொக்கலிங்கம், மரம் நண்பர்களின் செயலர் பழனியப்பா கண்ணன் ஆகியோர் ஆசிரியர் களையும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளையும் பாராட்டிப் பேசினர்.

இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் அ.தர்மசேகர், உதவி தலைமை ஆசிரியர் க. பாலசந்திரன், கணித ஆசிரியர்கள் ச.குமார், இரா.பிரபா, அறிவியல் ஆசிரியர் அ.அருள்,ஆங்கில ஆசிரியர் பா.ஆ.செ. மர்பி, சமூக அறிவியல் ஆசிரியர் பு.இராமமூர்த்தி, தமிழ் ஆசிரியர் இரா.பழனிவேல் ஆகியோர் சால்வை அணிவித்து நினைவுப் பரிசாக புத்தகமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை

அதே போல் 10 -ஆம் வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள்- 500க்கு 464 மதிப்பெண் பெற்ற ச.சங்கீதா, 432 மதிப்பெண் பெற்ற இரா.சரண்யா,431 மதிப்பெண் பா.மதுமிதா – ஆகியோருக்கும் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசாக மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’வழங்கப்பட்டது.

அதோடு இம்முவருக்கும் புதுக்கோட்டை மரம் நண்பர்கள் சார்பில் தலா 500 ரூபாய் பரிசாக அவ்வமைப்பின் செயலர் கண்ணன் வழங்கினார். மேலும் கடந்த ஆண்டு மாநில, மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் சால்வை அணிவித்து நூல்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

மற்றும் இன்று பள்ளிக்கு வருகை புரிந்த அனைத்து (170) மாணவ மாணவிகளுக்கும், புதியகல்வியாண்டை வரவேற்கும் வகையில் அப்துல்கலாம் உரைகள் அடங்கிய நூல்கள் அன்புப் பரிசாக வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளித் தலைமையாசி ரியர் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக உதவித் தலைமை ஆசிரியர் க.பாலசந்திரன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top