புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகாதினம் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, பள்ளியின் முதல்வர்கவிஞர்தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். ஆத்மா யோகாமையத்தின் நிறுவனர் யோகாபாண்டியன் பங்கேற்று, யோகா பயிற்சிகள் குறித்த விளக்கம் அளித்தார். அதைதொடர்ந்து கௌரவவிருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்விதுணை இயக்குனர் டாக்டர்ரமேஷ் கலந்து கொண்டு யோகாகலையின் முக்கியத் துவத்தைகுறிப்பிட்டார்.
ஒருசிலருக்கு மழையில் நனையப் பிடிக்கும், சிலருக்கு நன்றாக சாப்பிடப்பிடிக்கும். அப்படிஉங்களுக்கு உங்களை பிடிக்கவேண்டுமென்றால்உடலையும், மனதையும் உயிர் ஆற்றலையும் மேம்படுத்த தினசரி யோகா பயிற்சி செய்வதன் மூலம் நீங்கள் உடல்நலம் மனநலம் பெற்று சிறப்பாக வாழமுடியும் என்று பேசினார்.
சிறப்புவிருந்தனராகக் கலந்துகொண்ட பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தின் இயக்குனர் டாக்டர் பழனிச்சாமி பேசும்போது, இன்றைக்கு யோகாக்கலை சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று விளையாட்டுப்போட்டிகளின்வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.
யோகா தினத்தை தகவல் பலகையில் எழுதி வாழ்த்திவிட்டு கடந்து போகின்ற பள்ளிகளுக்கு மத்தியில் ஒவ்வொரு ஆண்டும் யோகா தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடுகின்ற ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியை வாழ்த்துகின்றேன்.
கல்வியில் மட்டுமல்லகலைகளிலும் சிறந்த பள்ளியாக இந்தப்பள்ளியை வெற்றியடைய வைத்திருப்பதில் முதல்வர் கவிஞர்தங்கம்மூர்த்தி மாணவர்களின் மீது அதிக அக்கறையோடு இருக்கின்றார். யோகாவைப் பொறுத்தவரை எட்டு நிலைகளை எவர் ஒருவர் சரியாகச் செய்கின்றாரோ அவரே யோகாவில் சிறந்தவர்.
ஆசனங்கள் மட்டுமன்றி பிராணாயாமம், தியானம், பயிற்சி செய்வதே யோகா ஆகும். யோகா என்பது மனம், சிந்தனைத் திறன், நம்பிக்கை, நடுநிலை மாறாமை, பசிக்கு உணவ ளித்தல், பொய் பேசாதிருத்தல், பணிவு, கடமை மாறாமை போன்ற எண்ணற்ற ஆற்றல் அனைத்தையும் ஒருநிலைப் படுத்தி செய்யப்படும் ஆழ்மனப் பயிற்சிஆகும்.
விவேகானந்தர் மற்றும் அப்துல்கலாம் ஆகியோர் சொன்னது போல உங்கள் எதிர்கால கனவுகள் மெய்ப்படஉடலையும், மனதையும், உயிரையும் ஒரே நேர்கோட்டில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அனைவருக்கும் யோகாதின வாழ்த்துகள் என்றார் அவர்.
சர்வேதேச, மாநில, மாவட்டஅளவில் போட்டிகளில்பரிசு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக ஆசிரியர் எம்.உதயகுமார் வரவேற்றார். நிறைவாக யோகா புவனேஸ்வரி நன்றிகூறினார்.
விழாவில், பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, வரலெட்சுமி, கோமதி, மேலாளர் ராஜா, ராமன், உடற்கல்வி ஆசிரியர்கள் நீலகண்டன், விஷாலி மற்றும் 900 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.