Close
செப்டம்பர் 20, 2024 8:50 காலை

திமுக அரசைக்கண்டித்து ஈரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

திமுக அரசைக் கண்டித்து ஈரோட்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் முதலியவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், லஞ்ச வழக்கில் அமலக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதிவில் இருந்து நீக்க வலியுறுத்தியும் தமிழம் முழுவதும் இன்று அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச் சருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

அதன்படி ஈரோடு மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க.சார்பில் வீரப்பன்சத்திரம் பேருந்து  நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான செங்கோட்டையன் எம் எல் ஏ, பேசியதாவது :
தமிழ்நாட்டில் 13 ஆண்டுகள் எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தார். 5 முறை ஜெயலலிதா முதல்வரானார். பிறகு இ.பி.எஸ். மாநிலத்தில் ஆட்சி செய்தார். அத்திக்கடவு-அவினாசி குடிநீர் திட்டம் உட்பட பல நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை வழங்கினார்.

ஆனால் தி.மு.க. ஆட்சியில் எஸ்.ஜ.எப்.ஐ. விளையாட்டு போட்டியில் கூட மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப் படவில்லை. மின் விநியோகம் அவ்வப்போது தடைப்படுகிறது. பேருந்து சேவை குறைக்கப்பட்டதால் இலவச பேருந்து பயணமும் கிடைக்கவில்லை.

கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.வரி பல மடங்கு உயர்த்தப்பட்டது. வணிகர்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். பால் விலை, சொத்து, தண்ணீர் வரி உயர்த்தப்பட்டது. மதுவின் மூலம் தி.மு.க.வுக்கு பல கோடி ரூபாய் தினசரி கிடைக்கிறது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் மட்டுமே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க. ஊழலால் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அதைத்தொடர்ந்து தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதியில் அ.தி.மு.க அபார வெற்றி பெறும் என்றார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.

முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கருப்பணன் எம்எல்.ஏ, முன்னாள் அமைச்சரும் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளருமானகே.வி. ராமலிங்கம் ஆகியோர் தலைமை  வகித்தனர்.எம்.எல்.ஏ.க்கள், ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ.கே. எஸ் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஈரோடு
கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள் தி.மு.க. அரசை கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வலியுறுத்தியும் கண்டன  முழக்கம்  எழுப்பினர். முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே .சி. பழனிச்சாமி, பேரவை மாவட்ட இணைச் செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட இணைச் செயலாளர் நந்தகோபால், பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி செல்வராஜ், வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ் உள்ளிட்ட  நிர்வாகிகள்,  ஆயிரக்கணக் கான  தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top