ஈரோடு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்ல சிவம் மீது நான்கு எம்எல்ஏக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபி எம்எல்ஏ செங்கோட்டையன், பவானி எம்எல்ஏ கருப்பணன், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, ஆகிய 4 பேரும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, பவானிசாகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அரசின் பல்வேறு வளர்ச்சிப்பணிகளை தி.மு.க மேற்கு மாவட்ட கழக செயலாளர் நல்லசிவம் திறப்புவிழா மற்றும் பூமி பூஜை செய்து வருகிறார்.
அரசு விதியின்படி அமைச்சர்கள், நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே அரசின் திட்டப்பணிகளை திறப்புவிழா மற்றும் பூமி பூஜை செய்யமுடியும் என்ற விதி இருக்கும்போது நல்லசிவம் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் எவ்வித அரசுப் பதவியிலும் இல்லாத போது எந்த விதியின் அடிப்படையில் கலந்து கொண்டு திறப்புவிழா மற்றும் பூமிபூஜை செய்து வருகிறார்கள் என்பதனை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் எங்களுக்கு தெரிவித்தால் அரசிடம் உரிய விளக்கம் பெற ஏதுவாக இருக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது