புதுக்கோட்டை சிவபுரம் எம்ஆர்எம். இன்டர்நேஷனல் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி, கொண்டாடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் யோகா தினம் குறித்து மாபெரும் அளவிலான விழிப்புணர்வு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக, இதன் மூலம் கிடைக்கும் பலன்களை பெருவாரியான மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.
யோக பயிற்சிகளை செய்தால் உடல் நலன் மட்டுமன்றி நமது மன நலனும் மேம்படுகிறது. பரபரப்பு மிகுந்த நம் மனதில் ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்துவதற்கு இது உதவியாக அமையும். உங்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, மனதை இலகுவாக்க யோகாசனம் பேருதவியாக இருக்கும். எப்போதெல்லாம் யோக பயிற்சிகளை செய்கிறோமோ, அப்போதெல்லாம் நம் மனதை ஒருநிலைப்படுத்தி கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
இவ்வாறு நம் மனம் ஒருங்கிணைக்கப்படுவதால், வேறு சிந்தனைகளின் குறுக்கீடு இல்லாமல் போகிறது. இதனால் மனதில் உள்ள கவலைகள் மறைந்து நிம்மதி பெருகும்.
2023 ஆம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் “வசுதைவ குடும்பத்திற்கான யோகா” ஆகும். இது “ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்” என்ற நமது கூட்டு விருப்பத்தை பிரதிபலிக்கிறது.
இந்த தலைப்பை மையமாக கொண்டு நடைபெற்ற யோகா பயிற்சியில் பள்ளி முதல்வர் , உடற் கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிறுவனர் எம்.ஆர்.மாணிக்கம் , தலைவர் எம்ஏ. முருகப்பன், செயலாளர் மீனாள் முருகப்பன்.
மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.