புதுக்கோட்டை மாவட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார் வழங்கப்பட உள்ளது.
மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வெளியிட்ட தகவல்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிக ளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார்கள் நுண்ணீர் பாசன இணைப்புடன் வழங்கப்பட உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளின் நிலத்தடிநீர் பாசனத்துக்கு உதவும் வகையில் நடப்பு ஆண்டிற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதில் புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு, வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 150 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.22.50 இலட்சத்திற்கு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங் களில் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப் படுகிறது.
திறன் குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகள் தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகரித்து பயிருக்கு நீர் பாய்ச்சும் நேரமும் அதிகரிக்கிறது. நிலத்தடிநீர் பயன்பாட்டுத் திறன் மேம்படுத்திட ஏற்கெனவே மின் இணைப்பு பெற்றுள்ள 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகள் பழைய திறனற்ற மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்புபவர்கள்,
புதிய ஆழ்துளை கிணறு, திறந்த வெளி கிணறு அமைத்து புதிய மின் மோட்டார் பம்புசெட்டு வாங்க விரும்புபவர்கள், அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் 4 ஸ்டார் குறியீடுள்ள மோட்டார் வாங்கிட ஆதார், சிட்டா, அடங்கல், புல வரைபடம், சிறு குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய விவரங்களுடன் அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம். இத்திட்டம் (நுண்ணீர் பாசன இணையதளம்) வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.
வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களான, உதவி செயற்பொறியாளர்(வே.பொ), திருச்சி மெயின் ரோடு, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை, கைபேசி எண் 99944 05285 என்ற அலுவலகத்தையும்,
உதவி செயற்பொறியாளர்(வே.பொ), நைனா முகமது கல்லூரி அருகில், இராஜேந்திரபுரம், அறந்தாங்கி, கைபேசி எண் 91593 84364 என்ற அலுவலகத்தையும், செயற்பொறியாளர்(வே.பொ), திருச்சிமெயின்ரோடு, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை, தொலைபேசி எண் 04322 221816 என்ற அலுவலகத்தையும்,
சிறு குறு விவசாயிகள் அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.