Close
நவம்பர் 24, 2024 7:12 மணி

திருவொற்றியூர் அரசுப் பள்ளிகளுக்கு ரூ.50 லட்சம் செலவில் மேஜை, நாற்காலி, இருக்கை வழங்கல்

சென்னை

மேஜை, இருக்கைகளை வழங்கிய வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி. உடன் மாதவரம் எஸ்.சுதர்சனம், மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, மாமன்ற உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம்

சென்னை,  திருவொற்றியூர் தொகுதிக்கு உள்பட்ட அரசு பள்ளிகளுக்கு சுமார் ரூ. 50 லட்சம் செலவிலான மேஜை, நாற்காலி, அமர்வு இருக்கைகள் உள்ளிட்டவைகளை வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி வியாழக்கிழமை வழங்கினார்.

மணலி அரசு உயர்நிலைப்பள்ளி, திருவொற்றியூர் விம்கோ நகர் ஜெயகோபால் கரோடியா அரசு உயர்நிலைப்பள்ளி, காலடிப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி காலடிப்பேட்டை, கத்திவாக்கம் சென்னை உயர்நிலைப்பள்ளி,  எர்ணாவூர் சென்னைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அமர்ந்து படிப்பதற்கான மேஜை மற்றும் அமர்வு இருக்கை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில்,  இந்த வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

சென்னை
திருவொற்றியூர் அரசுப் பள்ளிக ளுக்கு ரூ.50 லட்சம் செலவில் மேஜை, நாற்காலி, இருக்கைகள் டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி. வழங்கினார்

இக்கோரிக்கையை நிறைவேற்ற வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ. 50  லட்சம் செலவில் இப்பள்ளிகளுக்குத் தேவையான மேஜை, அமர்வுகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்நிலையில் 400 மேஜைகளையும் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம்எம்.எல்.ஏ, மண்டலக்குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி. ஆறுமுகம்,  மாமன்ற உறுப்பினர்கள் கே.பி. சொக்கலிங்கம், மு. சிவக்குமார், ஜெயராமன், சரண்யா கலைவாணன், திமுக பகுதி செயலாளர் வை.மா. அருள்தாசன் மற்றும் ஐந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top