தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்டஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் (21.06.2023 )நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 33 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்டஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளி களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டு மனை பட்டா, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 115 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பின்னர் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வைதிறன் குறைபாடு டையவர்களுக்கான தக்க செயலிகளுடன் கூடியதிறன் பேசி 13 பயனாளிகளுக்கும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி 2 பயனாளிகளுக்கும்,
14 பயனாளிகளுக்கு காதொலிகருவியும், 1 பயனளிக்கு மூன்றுசக்கர சைக்கிள், 1 பயனளிக்கு மடக்கு சக்கர நாற்காலி,மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு அமரும் நாற்காலி 2 குழந்தை களுக்கும் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஓ.சுகபுத்ரா , தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் வ.சீனிவாசன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.