தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த செயல் பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறைஅமைச்சர்என்.கயல்விழிசெல்வராஜ்தலைமையில்,அரசுதலைமைக் கொறடா கோவி. செழியன் , ஆதிதிராவிட நலத்துறை செயலாளர் க.லட்சுமிபிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், தாட்கோ ஆணையர் கந்தசாமி, பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை (மத்திய தொழிற் பணி), மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் (22.06.2023) நடைபெற்றது.
இக்கூட்டத்தை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழிசெல்வராஜ் தலைமை ஏற்று தொடக்கி வைத்து பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக் கிணங்க தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலானஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் மக்கள் தொகை, முதல்வரின் முகவரி துறையில் இருந்து வரப்பெற்ற மனுக்களின் நிலுவை விவரம், ஆதிதிராவிடநலப் பள்ளியில் எண்ணிக்கை, நான்கு மாவட்டங்களில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விவரம், 10 மற்றும் 12 -ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விவரம்,
ஆதிதிராவிடர் நலவிடுதிகளின் எண்ணிக்கை, கடந்தாண்டு விடுதிகளில் தங்கி கல்வி பயின்ற மாணவர்களின் தேர்ச்சி விவரம், இலவசவீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம், அடிப்படைவசதி, தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமம், மயானம் மற்றும் மயானப்பாதை வசதிதிட்டம், சமத்துவமயானம், ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டபணிகள் ,பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டம், நீதிமன்ற வழக்குகள் விவரம், மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம்,
வங்கியில் கடன் பட்டு வாடா செய்யப்படாமல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள், வங்கியில் முன்பொழிவு பெறாமல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள், நிதியாண்டில் பொருளாதாரம் மேம்பாட்டத்தின் கீழ் இலக்கு மற்றும் சாதனைகள், தஞ்சாவூர் மண்டலத்திற்கு உட்பட்ட கட்டுமான பணிகள் போன்ற பல்வேறு பொருளடக்கம் இக்கூட்டத்தில் ஆய்வுசெய்யப்பட்டது.
மேலும் நிலுவையில் உள்ளஅனைத்துதிட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் முன்னிலையில் நடைப்பெற்ற தஞ்சாவூர் மண்டல ஆய்வுக் கூட்டத்தில் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு தாட்கோ மானியமாக ரூ.12.24, 235- மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உட்பட மொத்தம் ரூ.43,55,786 – மதிப்பீட்டில் உள்ள வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
மேலும் மகளிருக்கான சுய உதவிக்குழுக்களின் கீழ் அவர்க ளின் பொருளாதார மேம்பாட்டிற்காக 10 குழுக்களுக்கு 120 மகளிருக்குதாட்கோமானியமாகரூ.25,00,000 – மானியத்துடன் கூடியவங்கிக் கடன் உட்படமொத்தம் ரூ.7,44, 7,000 – மதிப் பீட்டில் உள்ள வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
துரிதமின் இணைப்புதிட்டத்தின் கீழ் விவசாயிகளின் பயன்பாட்டிற்கென மின் இணைப்பு 25 விவசாயிகளுக்கு தாட்கோமானியமாகரூ.57,90,000 – மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் உட்படமொத்தம் ரூ.64,80,000- மதிப்பீட்டில் உள்ள வாகனங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் துரைசந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), கூடுதல் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எச்.எஸ்.ஸ்ரீகாந்த் , தஞ்சாவூர் மாநகராட்சிமேயர் சண். ராமநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் நான்கு மாவட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.